Saturday, December 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: original driving license

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயமில்லை!

அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயமில்லை!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வாகன ஓட்டிகள், வாகனங்களில் செல்லும்போது அசல் உரிமத்தை வைத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும், அது தேவையற்ற குழப்பத்தை விளைவிக்கும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மோட்டார் வாகன சட்டம் 1988ன் படி, வாகன ஓட்டுநர்கள் உரிய ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்றும், சீருடை அணிந்த காவல்துறையினர் வாகன தணிக்கை செய்யும்போது, அசல் உரிமத்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் (பிரிவு 130) என்றும் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. மேலும், செப்டம்பர் 1ம் தேதி (இன்று) முதல் அனைத்து வகை வாகன ஓட்டிகளும், வாகன பயணத்தின்போது அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அவ்வாறு அசல் உரிமம் இல்லாவிட்டால், மூன்று மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் அல்லது இவை இரண்டு சேர்த்தும் தண்டனை விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியது. இந்த உத்தரவு வாகன ஓட்டிகளிடையே ...