உறுப்பு மாற்று சிகிச்சைக்காக இளைஞர் கடத்தப்பட்டாரா?: நடராஜன் விவகாரத்தில் நடந்தது என்ன?
சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை செய்வதற்காகவே தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞரை வலுக்கட்டாயமாக சென்னைக்கு ஏர் ஆம்புலன்ஸில் கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சசிகலாவின் கணவரும், 'புதிய பார்வை' இதழின் ஆசிரியருமான எம்.நடராஜன் (74), உடல்நலக்குறைவால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் செயலிழந்து விட்டதாகவும், விரைவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள இருப்பதாகவும் சில நாள்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. உறவினர்கள் வட்டாரத்தில் உறுப்பு தானம் பெறுவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டது.
இதற்கிடையே, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கூத்தாடிவயலைச் சேர்ந்த கார்த்திகேயன் என்ற 22 வயது இளைஞர், கடந்த செப். 30ம் தேதி சாலை வி...