Sunday, March 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: ONGC put forward three demands for immediate stopping of oil operations

கனல் கக்கும் கதிராமங்கலம்! அலட்சிய அரசாங்கம்; கதறும் மக்கள்

கனல் கக்கும் கதிராமங்கலம்! அலட்சிய அரசாங்கம்; கதறும் மக்கள்

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
கதிராமங்கலத்தில் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக எண்ணெய் துரப்பண பணிகள் நடந்து வரும் நிலையில், சமீப காலமாய் என்னதான் ஆச்சு அந்த ஊர் மக்களுக்கு? திடீரென்று அவர்கள் வெகுண்டெழக் காரணம் என்னவாக இருக்க முடியும்? இதுதான் இப்போதைக்கு எல்லோருடைய மனதிலும் எழும் மிகப்பெரிய கேள்வி. இந்தக் கேள்விக்கு விடை தேடும் பயணமாக நாமும் அந்த கிராமத்திற்கு பயணப்பட்டோம். கதிராமங்கலத்திற்கு 2 கி.மீ. தொலைவிலேயே 20க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். சந்தேகத்திற்கிடமானவர்கள் யாரும் ஊருக்குள் நுழைந்து விடக்கூடாது என்பதற்கான ஏற்பாடு இது என்றார்கள். காவல்துறையினர் இப்படி என்றால், அந்த கிராம மக்கள் ரொம்பவே உஷாராக இருந்தார்கள். நம்மை முழுவதும் விசாரித்து, நாம் காவல்துறையின் உளவாளிகளோ அல்லது சமூக விரோத கும்பலைச் சேர்ந்தவர்களோ இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னரே ஊருக்குள் மக்கள் போராடும் இடத்...