Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Nirmala Seetharaman

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு; இனி 12 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது!

வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு; இனி 12 லட்சம் ரூபாய் வரை வரி கிடையாது!

இந்தியா, முக்கிய செய்திகள்
மாதச் சம்பளதாரர்கள், மத்திய தர வர்க்கத்தினரை மகிழ்ச்சிப் படுத்தும் விதமாக, ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய அரசின் 2025-2026ஆம்ஆண்டுக்கான நிதிநிலைஅறிக்கையை பிப். 1ஆம் தேதி(சனிக்கிழமை) நிதித்துறைஅமைச்சர் நிர்மலா சீதாராமன்நாடாளுமன்றத்தில்தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள்: வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்வு: புதிய வருமான வரி முறையில்,வருமான வரி விலக்கிற்கானஉச்ச வரம்பு 7 லட்சம் ரூபாயில்இருந்து 12 லட்சம் ரூபாயாகஉயர்த்தப்பட்டு உள்ளது. இதன்படி,ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரைவருமானம் பெறுவோர், வருமான வரிசெலுத்துவதில் இருந்து விலக்குஅளிக்கப்படுவதாக அமைச்சர்நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். கடந்த 2019ல் 5 லட்சமாகவும்,2023ல் 7 லட்சமாகவும் உயர்த்தப்பட்டவரு...
எதுக்காக சொல்றேன்னா… அதுக்காக சொல்றேன்…! பேனாக்காரன் பதில்கள்!!

எதுக்காக சொல்றேன்னா… அதுக்காக சொல்றேன்…! பேனாக்காரன் பதில்கள்!!

தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உதயநிதி, இளைஞர் பட்டாளத்தை திரட்டிக் கொண்டிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் சொல்லி இருக்கிறாரே? பழைய மாணவர்கள் பற்றி ரஜினி பேசிய பேச்சுக்கு துரைமுருகன் எதிர்வினையாற்றியது குறித்து அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை கடுமையாக கடிந்து கொண்டதாகச் சொல்லப்பட்டது. அதனால் அவரை குளிர்விக்கவே இந்தளவுக்கு இறங்கி வந்திருக்கிறார் துரைமுருகன். பெரியார் சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை செலுத்தியது எதைக் காட்டுகிறது?  நடிகர் விஜயை அரசியல் ரீதியாக அவரை வழிநடத்த சரியான ஆள் இல்லை என்ற விமர்சனம் கிளம்பிய நிலையில், பெரியார் பிறந்தநாளில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து அரசியல் களத்திலும் தான் ஒரு கில்லிதான் என்பதை நிரூபித்திருக்கிறார் தளபதி. ஏற்கனவே சமூக ஊடகங்களில் விஜயை, திமுகவின் இணையக்கூலிகள் ஆபாசமாக அடித்து துவைத்து வரும் நிலையில், பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியது ஆளும்தரப்...
இனி இந்தியாவில் விவசாயமே இருக்காது! ரோடு இருக்கும்; சோறு கிடைக்காது!!

இனி இந்தியாவில் விவசாயமே இருக்காது! ரோடு இருக்கும்; சோறு கிடைக்காது!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், திருவண்ணாமலை, முக்கிய செய்திகள்
கொரோனா ஊரடங்கு என்ற பெயரில் மக்களை வீட்டிற்குள் முடக்கிவிட்டு நடுவண் பாஜக அரசு, நாட்டையே தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டங்களை எவ்வித விவாதத்திற்கும் உட்படுத்தாமல் அடுத்தடுத்து நிறைவேற்றி வருகிறது. இது, அரசியல் கட்சிகளிடம் மட்டுமின்றி பலமட்டங்களிலும் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. நடுவண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி, மின் விநியோகம், அணுசக்தி தயாரித்தல், விமான போக்குவரத்து, கனிமச்சுரங்கம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்தார். இத்தகைய அதிரடியான முடிவுகள் எல்லாமே, தேசிய கட்டமைப்பு மேம்பாடு வரைவுத் திட்டத்திலேயே மறைமுகமாக கோடிட்டு காட்டியிருப்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.   தேசிய கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்ட (National Infrastructure Pipel...
தமிழகத்தின் புதிய ஆளுநர் யார்?

தமிழகத்தின் புதிய ஆளுநர் யார்?

அரசியல், தமிழ்நாடு
தமிழகத்தில் ஓராண்டுக்கு மேலாக பொறுப்பு ஆளுநர் மட்டுமே இருந்து வரும் நிலையில், விரைவில் புதிதாக முழுநேர ஆளுநர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2014ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் பாஜக ஆட்சி அமைத்தது. அரியணையேறிய கையோடு, முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது நியமிக்கப்பட்டு இருந்த ஆளுநர்களை கட்டாய ஓய்வில் செல்லும்படி வற்புறுத்தியது. பாஜக, ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் ஆளுநராக நியமிக்கப்பட்டனர். ஆனாலும், தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் ஆட்சியின்போது ஆளுநராக நியமிக்கப்பட்ட ரோசய்யா, தொடர்ந்து பதவியில் இருந்து வந்தார். அவர், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுடன் இணக்கமான போக்கை கடைப்பிடித்ததாலும், நரேந்திர மோடியுடன் ஜெயலலிதாவுக்கு இருந்த பரஸ்பர நட்பின் காரணமாகவும் ரோசய்யா பதவிக்கு எந்த தொந்தரவும் ஏற்படவில்லை. அவர் தனது முழு பதவிக்காலத்தையும்...
நிர்மலா சீதாராமன்: பாதுகாப்புத்துறை அமைச்சரான முதல் தமிழச்சி!

நிர்மலா சீதாராமன்: பாதுகாப்புத்துறை அமைச்சரான முதல் தமிழச்சி!

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
நடுவண் பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் இன்று பதவியேற்றுக் கொண்டார். சுதந்திர இந்தியாவில் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள முதல் தமிழர் நிர்மலா சீதாராமன் என்பது குறிப்பிடத்தக்கது. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மூன்றாவது முறையாக இன்று மாற்றி அமைக்கப்பட்டது. 9 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர். மேலும் சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றி அமைக்கப்பட்டது. அனைவருக்கும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த அமைச்சரவை மாற்றத்தில் இரண்டு மாற்றங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதுவரை தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சராக தனி அதிகாரத்துடன் இருந்து வந்த நிர்மலா சீதாராமனுக்கு, நாட்டின் மிக இலாகாக்களில் ஒன்றான பாதுகாப்புத்துறை வழங்கப்பட்டு உள்ளது. சுதந்திர இந்தியாவில் இத்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் தமி...
அனிதா: கடைசி பலியாக இருக்கட்டும்!

அனிதா: கடைசி பலியாக இருக்கட்டும்!

அரியலூர், கல்வி, தமிழ்நாடு, திருச்சி, முக்கிய செய்திகள்
நீட் தேர்வில் தோல்வி, கலைந்து போன மருத்துவப் படிப்பு என விரக்தியின் உச்சத்தில் இன்று (செப்.1) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அனிதாவே, நீட் அரக்கனுக்கு கடைசி பலியாக இருக்க வேண்டும். தரகு அரசியலில் கரைந்து போன இளம் மாணவியின் மரணம், தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. அனிதா. 17 வயதே ஆன இளம் மாணவி. மனசு முழுக்க மருத்துவக் கனவுகளைச் சுமந்து கொண்டு இருந்தார். படிப்பு ஒன்று மட்டும்தான் தன்னையும், குடும்பத்தையும் நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் நம்பிக்கையாக இருந்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் என்ற சின்னஞ்சிறிய கிராமத்தில் இருந்து எதிர்காலத்தில் நமக்கு கிடைத்திருக்க வேண்டிய திறமையான மருத்துவர் இன்று உயிருடன் இல்லை. தற்கொலை, மன அழுத்தம், இருதய துடிப்பு நின்றது என பிரேத பரிசோதனை அறிக்கை என்ற பதத்தில் சொன்னாலும், அனிதாவின் பலிக்கு முதல் குற்றவாளி தரகர் ஆட்சி ...