Tuesday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: new century book house

சேலம் மைய நூலகத்திற்கு அடுத்த சிக்கல்; பாஜக, இந்து முன்னணியும் இடம் கேட்டு கோதாவில் குதிப்பு!

சேலம் மைய நூலகத்திற்கு அடுத்த சிக்கல்; பாஜக, இந்து முன்னணியும் இடம் கேட்டு கோதாவில் குதிப்பு!

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
சேலம் மாவட்ட மைய நூலகத்திற்குச் சொந்தமான இடத்தை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுவதாக வந்த தகவலால், அதிர்ச்சி அடைந்த பாஜக, இந்து முன்னணி நிர்வாகிகள், தங்கள் கட்சிகளுக்கும் நூலக வளாகத்தில் கடை கட்டிக்கொள்ள இடம் ஒதுக்குமாறு திடீர் கோதாவில் குதித்துள்ளனர்.   சேலம் குமாரசாமிப்பட்டியில் அரசு இருபாலர் கலைக்கல்லூரி அருகில், மாவட்ட மைய நூலகம் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தின் பின்பகுதியில் 5000 சதுர அடிக்கு மேல் காலி நிலம் உள்ளது. இந்த இடத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குச் சொந்தமான நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்கு கடை கட்டிக்கொள்ள சேலம் மாவட்ட நிர்வாகம் இசைவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. சேலம் முள்ளுவாடி ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதற்காக நிலம் கையகப்படுத்தும்போது, பழைய பேலஸ் தியேட்டர் எதிரில் செயல
சேலம் கலெக்டருடன் நூலகத்துறை குஸ்தி! அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி!

சேலம் கலெக்டருடன் நூலகத்துறை குஸ்தி! அரசு நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் மாவட்ட மைய நூலகத்திற்குச் சொந்தமான ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்துக்கு இலவசமாக கொடுக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிப்பதால், நூலகத்துறை அதிகாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.   சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லூரி அருகே, மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது. மாநகரின் மையப்பகுதியில் அசோகா மரம், புளிய மரம், பனை மரம், கொய்யா, மரமல்லி, பாதாம், வாழை மரங்கள் சூழ காற்றோட்டமான சூழ்நிலையில் இந்த நூலகம் அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்கள் தவிர மற்ற அனைத்து நாள்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்நூலகம் செயல்படுகிறது. சிவில் சர்வீசஸ் தேர்வு, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கென பிரத்யேக நூல்கள் தருவிக்கப்பட்டது, பெண்களுக்கென தனி வாசிப்புப்பிரிவு என தொடங்கப்பட்டதால் இளைஞர்க