Thursday, April 18மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: mourning

ஸ்ரீதேவியின் ஆத்மா சாந்தி அடையாது!: நடிகர்கள் இரங்கல்

ஸ்ரீதேவியின் ஆத்மா சாந்தி அடையாது!: நடிகர்கள் இரங்கல்

இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விருதுநகர்
நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் திடீரென்று நேற்று இரவு (பிப்ரவரி 24, 2018) மரணம் அடைந்தது, அவருடைய ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. உடன் நடித்த நடிகர்கள் உள்பட திரையுலகைச் சார்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன்: ''மூன்றாம் பிறை பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை, கன்னி மயிலாக, கண்ணியமான மனைவியாக, பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்த்து மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்'' என்று நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆங்கிலத்திலும், தமிழிலும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் தனது இரங்கல் செய்தியை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ''கடந்த மாதம்கூட ஸ்ரீதேவியை நான் நேரில் சந்தித்தேன். அப்போது அவர் என்னை வாஞ்சையுடன் பார்த்ததை கண்களில் கண்டேன். என் க
விடுதலைப்புலிகளின் லட்சிய நெருப்பு தமிழ்ச்செல்வன்!

விடுதலைப்புலிகளின் லட்சிய நெருப்பு தமிழ்ச்செல்வன்!

இந்தியா, உலகம், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரமரணம் அடைந்து இன்றுடன் (நவம்பர் 2, 2017) பத்து ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், உலகத்தமிழர்கள் அவருக்கு வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர். தமிழ்ச்செல்வன் யார்? விடுதலைப்புலிகள் இயக்க செயல்பாடுகள் மீது பற்றுகொண்டு, தன்னுடைய 17வது வயதில் இயக்கத்துடன் இணைத்துக் கொண்ட சு.ப.தமிழ்ச்செல்வன், இலங்கையின் கிளிநொச்சியைச் சேர்ந்தவர். எனினும், இயக்கத்தில் இணைந்த பிறகு, யாழ்ப்பாணமே அவருடய களமானது. இலங்கை அரச பயங்கரவாதத்தின் சதியால் வான்வெளி ராணுவக் குண்டு வீச்சில் 2.11.2007ம் தேதி காலை 6 மணியளவில் தமிழ்ச்செல்வன் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். அவர் மரணிக்கும் வரை கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்காக நெஞ்சுரத்துடன் உழைத்த முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராகவே விளங்கினார், தமிழ்ச்செல்வன். துவக்கத்தி