Thursday, March 28மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Money

”நம்புங்கள் பிரதமரே!  முயலுக்கு நான்கு கால்கள்தான்!!”

”நம்புங்கள் பிரதமரே! முயலுக்கு நான்கு கால்கள்தான்!!”

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்பு  (Demonetisation) நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில், சமூகவலைத்தளங்களில் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பலர் கேலி, கிண்டலாக மீம்ஸ்கள் மூலம் கருத்துகளை பதிவிட்டு உள்ளனர். இரவு நேரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த வயதிலும் அப்படி என்னதான் பற்றுதலோ தெரியவில்லை. இப்படிச் சொல்வது கொஞ்சம் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஸ்டைல் போலத் தோன்றினாலும் யாரும் அனர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். அவர் நாட்டை உலுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் இரவில்தான் அறிவிக்கிறார். பணமதிப்பிழப்பு முதல் ஜிஎஸ்டி வரை எல்லாமே இரவில்தான் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 1000 ரூபாய், 500 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவிக்கப்படுவது குறித்து எனக்குக்கூட தெரியாது என அப்பாவியாகச் சொன்னார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி. ரிசர்வர் வங்கி ஆளுநருக்கே கூட அறிவிப்புக்கு சற்று முன்னர்தான் தெரி
என் பிறந்தநாளுக்கு யாரும் கேக் வெட்ட வேண்டாம்; கால்வாய் வெட்டுங்கள்!; கமல்ஹாஸன்

என் பிறந்தநாளுக்கு யாரும் கேக் வெட்ட வேண்டாம்; கால்வாய் வெட்டுங்கள்!; கமல்ஹாஸன்

அரசியல், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
''என் பிறந்த நாளையொட்டி யாரும் கேக் வெட்ட வேண்டாம். அதற்கு பதிலாக கால்வாய் வெட்டுங்கள்'' என்று தனது ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் கமல்ஹாஸன் அரசியல் கட்சி தொடங்குவதாக கூறியிருந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு எண்ணூர் கடலில் அனல்மின் நிலையத்தின் சாம்பல் கழிவுகள் கலப்பதாக ட்விட்டரில் புகார் கூறியிருந்தார். மேலும், அவர் அதிகாலையில் திடீரென்று எண்ணூர் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வும் மேற்கொண்டார். வழக்கமான ட்விட்டர் அரசியலில் இருந்து கமல் நேரடியாக களம் இறங்கியது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்ப டுத்தியது. அத்துடன் அவர், அங்குள்ள மீனவ மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். கமல்ஹாசன் தனது பிறந்த நாளான நவம்பர் 7ம் தேதி அன்றுதான் ரசிகர்களை சென்னைக்கு நேரில் வரவழைத்து சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இந்தாண்டு இரண்டு நாள்கள் முன்னதா
“நிஜ வாழ்க்கையில் நடிக்கிறேனா?” – ரஜினிகாந்த் பதில்

“நிஜ வாழ்க்கையில் நடிக்கிறேனா?” – ரஜினிகாந்த் பதில்

இந்தியா, சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
‘காசு தராததால் நிஜ வாழ்க்கையில் நடிப்பது கிடையாது’ என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் இசை வெளியீட்டு விழா, துபாயில் உள்ள புர்ஜ் பார்க்கில் நாளை (அக். 27, 2017) நடைபெறுகிறது. இதற்காக ரஜினி, எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட மொத்த படக்குழுவினரும் துபாய் சென்றுள்ளனர். முன்னதாக, இன்று (அக்.26, 2017) பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ரஜினிகாந்த், எமி ஜாக்சன், ஷங்கர், அக்‌ஷய் குமார், ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் சுபாஷ்கரன் ஆகியோர் பதில் அளித்தனர். ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகவே நடந்த இந்த சந்திப்பில், ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே பதில் அளித்தார் ரஜினி. ‘பொது வாழ்க்கையில் இவ்வளவு எளிமையாக இருக்கிறீர்களே..?’ என்று ஒரு பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு, “நான் சினிமாவில் மட்டுமே நடிக்கிறேன். நிஜ வாழ்க்கையில் நடி
சேலம் வாலிபர் மீது தாக்குதல்; பணம், நகை பறிப்பு

சேலம் வாலிபர் மீது தாக்குதல்; பணம், நகை பறிப்பு

சேலம், முக்கிய செய்திகள்
சேலம்: சேலம் வாலிபரை சரமாரியாக தாக்கி, பணம், நகைகளை பறித்துச்சென்றதாக அரசு ஊழியர் மீது புகார் எழுந்துள்ளது. சேலம் ஆண்டாள் தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் ராகேஷ் (37) (படம்). டெல்லியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தனியார் நிறுவனத்தில் தென்னிந்திய ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிறுவனம், விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சியும், பண்ணை அமைத்துக் கொடுக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது. சேலம் கோரிமேட்டைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு ஏற்காடு முளுவி பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. இவருடைய தோட்டத்தில், கடந்த ஜூலை 23ம் தேதி தனியார் நிறுவனம் சார்பில் 245 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வைக்கப்பட்டன. இதன்மூலம் சேகரமாகும் தேனில் ஒரு பகுதியை நிலத்திற்குச் சொந்தமானவருக்கு வழங்கப்படும் என்ற ஒப்பந்த அடிப்படையில் தேனீ வளர்ப்புப் பெட்டிகள் வைக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த சில நா