
அடேங்கப்பா…! கல்யாணச் சந்தையில் புழங்கும் 6 லட்சம் கோடி ரூபாய்!
''கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டைக் கட்டிப்பார்!'' ஆகிய இரண்டுமே அனுபவித்து, ஆய்ந்து சொன்ன மொழிகள். இவ்விரண்டு திட்டங்களிலும் பொருளாதாரம் முக்கிய பங்காற்றுகிறது. மட்டுமின்றி, உறவுகளை ஒன்றிணைப்பதும் முக்கியமாகிறது.
எப்போது, எது கைகூடும்? எது உடையும்? எப்போது இத்திட்டங்கள் நிறைவேறும்? என்று கடைசித் தருணம் வரை திக்… திக்… நிமிடங்களாகவே கடந்து போக வேண்டியதிருக்கிறது. இரண்டுமே உணர்வுப்பூர்வமானது. என்றாலும்கூட, கல்யாண வைபவம் என்பது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியது என்பதால் மனதிற்கு நெருக்கமானதாகிறது.
ஒரு காலத்தில் மணமகள் அல்லது மணமகன் வீட்டிலேயே தென்னங்கீற்றுப் பந்தல் போட்டு, திருமண விழாக்களும், விருந்து உபசரிப்பும் களைகட்டின. நாகரிக மாற்றத்தால் இப்போது அவரவர் சக்திக்கு ஏற்ப மண்டபம் பிடிக்கின்றனர். மண்டபத்தை உறுதி செய்த பிறகு அழைப்பிதழ் அச்சடிப்பதில் இருந்து தொடங்குகிறது கல்யாண வ...