Thursday, October 16மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: lpg cylinder

காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் 3வது முறையாக உயர்வு; சேலத்தில் ரூ.828 ஆக நிர்ணயம்!

காஸ் சிலிண்டர் விலை ஒரே மாதத்தில் 3வது முறையாக உயர்வு; சேலத்தில் ரூ.828 ஆக நிர்ணயம்!

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட மானியமில்லா எல்பிஜி சிலிண்டர் விலை, நடப்பு மாதத்தில் மூன்றாவது முறையாக ஏற்றப்பட்டுள்ளது. இதனால் சேலத்தில், நடப்பு மாதத்தில் காஸ் சிலிண்டர் விலை 803ல் இருந்து 828 ரூபாயாக ஆக அதிகரித்துள்ளது.   சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இந்தியாவில் காஸ் சிலிண்டருக்கான தேவை, உற்பத்தித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மாதந்தோறும் காஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயம் செய்து வருகிறது.   அதன்படி, ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில், அதற்கு அடுத்த மாதத்திற்கான புதிய விலை நிர்ணயம் செய்யப்படுவது நடைமுறை. ஆனால் அண்மைக் காலமாக இந்தியாவில், ஒரே மாதத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட முறை காஸ் சிலிண்டர் விலையை மறு நிர்ணயம் செய்யும் நிலை உர...