Friday, November 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: kaliyannan

மக்களுக்காக ஜமீன் சொத்துகளை வாரி வழங்கிய ‘வாழும் அதிசயம்’ காளியண்ணன்!

மக்களுக்காக ஜமீன் சொத்துகளை வாரி வழங்கிய ‘வாழும் அதிசயம்’ காளியண்ணன்!

சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, நாமக்கல், முக்கிய செய்திகள்
பொதுவாழ்விலும், சொந்த வாழ்க்கையிலும் சுய ஒழுக்கமும், கட்டுப்பாடும் அருகிவிட்ட இக்காலத்திலும், தன்னுடைய ஜமீன் சொத்துகளை மக்களுக்காக வாரி வழங்கியதுடன், வாழ்நாளெல்லாம் மக்களுக்காகவே அர்ப்பணித்து பயன்மரமாய் பழுத்திருக்கிறார், டி.எம்.காளியண்ணன். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சிஹெச்பி காலனியில் வசிக்கிறார், டி.எம்.காளியண்ணன் (101). மனைவி, பார்வதி (90). ஜன. 10ம் தேதி, அவருடைய 101வது பிறந்த நாளை குடும்பத்தினர், சுற்றமும் நட்பும் சூழ கோலாகலமாக கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். இரண்டு மகன்கள்; மூன்று மகள்கள்; 16 பேரன் பேத்திகள்; 8 கொள்ளுப்பேரன் பேத்திகள் என ஆலமரமாய் விழுதுவிட்டிருக்கிறார்.   முதுபெரும் சுதந்திரப்போராட்டத் தியாகி, பழுத்த காங்கிரஸ்காரர், மஹாத்மா காந்தி, கர்ம வீரர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி, பெரியவர் பக்தவச்சல...