காமெடி டைம்: பெயர் – ஹெச் ராஜா; உபதொழில் – கலவரமூட்டுவது!
தமிழகத்தில் பாஜகவை எதிர்த்து திமுகவோ, அதிமுகவோ அல்லது ஏனைய பிற அரசியல் கட்சிகளோ அரசியல் செய்ய இப்போதைக்கு தேவை இல்லை என்றே தோன்றுகிறது. அந்தளவுக்கு இளைஞர்கள் மத்தியில் அக்கட்சி கடும் அதிருப்தியை சம்பாதித்து இருக்கிறது.
அதற்கு, அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போன்றோருக்கு குவியும் எதிர்வினைகளே சான்று.
இளைஞர்கள் மொழியில் சொல்வதென்றால், அவர்கள் எதைச்சொன்னாலும் அதை தங்கள் இஷ்டத்துக்கு கிழி கிழினு கிழித்து தொங்கவிடுவது அல்லது மரண கலாய் செய்வது என்ற ரீதியில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
சட்டப்பேரவையில், உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு பிரநிதியைக்கூட கொண்டிராத பாஜக, தங்கள்¢ இருப்பை பதிவு செய்ய விஜய், கமல்ஹாசன் போன்றோர் மீதான கணைகளை வீசுகிறது. எதை எதிர்பார்த்து அந்தக் கட்சி இவற்றையெல்லாம் செய்து வருகிறதோ, அதற்கு மேலாகவே அக்கட்சி இப்போது அறுவடை...