ஜியோ விளம்பரத்தில் மோடி; ஆர்டிஐ தலைவர் பிரதமர் அலுவலகத்திற்கு கடும் எச்சரிக்கை!
பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் ரிலையன்ஸ் ஜியோ விளம்பரங்கள் வெளியிடப்பட்டது குறித்த விவகாரத்தில், இந்திய தகவல் ஆணையத் தலைவர் ஆர்.கே. மாத்தூர், பிரதமர் அலுவலகத்தை கடுமையாக எச்சரித்துள்ளார்.
ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் அதிபர் முகேஷ் அம்பானி ஓராண்டுக்கு முன்பு, ஜியோ நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தினார். அது தொடர்பான விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும் பயன்படுத்தப்பட்டு இருந்தது. பிரதமரின் புகைப்படத்துடன் கூடிய ஜியோ விளம்பரங்கள் நாடு முழுவதும் உள்ள முன்னணி நாளிதழ்கள், டிவி சேனல்களில் தொடர்ந்து வெளியாகின.
அம்பானி, அதானி போன்ற தொழில் அதிபர்களுக்காகவே பிரதமர், வேலை செய்வதாக ஏற்கனவே எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்ற நிலையில், இந்த விளம்பரங்கள் மேலும் எரிச்சலை ஏற்படுத்தியது.
ஜியோ விளம்பரத்தில் பிரதமரின் புகைப்படம் வெளியிட முறையான அனுமதி வழங்கப்பட்டதா? என்பது க...