ஜெயலலிதாவை சிறை வைத்திருந்தாரா எம்ஜிஆர்?
மக்களின் மனம் கவர்ந்த தலைவர்களின் அந்தரங்க தகவல்களைத் தெரிந்து கொள்வதில் வெகுசன மக்களுக்கு என்றுமே ஓர் அலாதி தேடல் இருந்து கொண்டே இருக்கும். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கண்ட நிலையில்கூட இன்றைக்கும் அவரைப்பற்றிய ஆச்சர்யப்படத்தக்க செய்திகள் வெளிந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வரிசையில் இப்போது ஜெ.ஜெயலலிதா. எப்போதும் பரபரப்பு அரசியலுக்கு பெயர் பெற்றவர். அவர் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி, உடல்நலக்குறைவால் மறைந்தார். அரசியலிலும் சினிமாவிலும் எதிர்நீச்சல் அடித்தே பழக்கப்பட்ட ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை, ''ஜெயலலிதா: மனமும் மாயையும்'' என்ற பெயரில் மூத்த எழுத்தாளர் வாஸந்தி எழுதி இருக்கிறார். அந்த நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.
நூலாசிரியர் வாஸந்தி, ஜெயலலிதாவைப் பற்றி பல ஆண்டுகளாகத் திரட்டிய தகவல்களின் அடிப்படையில் இந்த நூலை படைத்திருக்கிறார். அரசியல் மற்றும் வ...