Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: jalloothu hills

சேலம்: சூரியூர் கிராமம் எங்கே? 28 ஆண்டாக தொடரும் சர்ச்சை!

சேலம்: சூரியூர் கிராமம் எங்கே? 28 ஆண்டாக தொடரும் சர்ச்சை!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
சேலம் அருகே, இரண்டு மலைகளுக்கு இடையே பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த சூரியூர் பள்ளக்காடு கிராமம் வருவாய்த்துறை ஆவணங்களில் இருந்து திடீரென்று தொலைந்து போனதாக சொல்லப்பட, 28 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமத்தைத் தேடும் பணிகளில் வனக்கிராம மக்கள் சட்டப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி வட்டாரத்திற்கு உட்பட்டது சூரியூர் பள்ளக்காடு எனும் வனக்கிராமம். ஜல்லுத்துமலை, ஜருகுமலை ஆகிய இரு மலைகளுக்கு இடையே பள்ளத்தாக்கில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்த வனக்கிராமத்தில் 77 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருவதுடன், மலையடிவாரத்தில் மலர், மஞ்சள், வெங்காயம் உள்ளிட்ட பயிர்களும் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில், சேர்வராயன் தெற்கு வனச்சரகத்திற்கு உட்பட்ட, காப்புக்காடாக அறிவிக்கப்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், வனப்பகுதியை விட்டு உடனடியாக வெளியேற...