தண்டனை தீர்ப்பை திரும்பப்பெற வேண்டும்!: பேரறிவாளன் புதிய மனு
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை திரும்பப்பெற வேண்டும் என்று கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் சி.பி.ஐ பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்திற்கு வந்திருந்தபோது ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் தண்டிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில், வெடிகுண்டு தயாரிக்கும் சதித்திட்டத்தில் உடந்தையாக இருந்தார் என்பதே பேரறிவாளன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரி தியாகராஜன் ஒரு பிராமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். ...