Saturday, April 27மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Indian team

கிரிக்கெட்: இந்தியாவுக்கு மரண அடி கொடுத்தது இலங்கை!

கிரிக்கெட்: இந்தியாவுக்கு மரண அடி கொடுத்தது இலங்கை!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
தரம்சாலாவில் இன்று நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார பெற்றி பெற்றது. இந்தியா - இலங்கை கிரிக்கெட் அணிகள் மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி, ஹிமாச்சல்பிரதேச தலைநகர் தரம்சாலாவில் இன்று (டிசம்பர் 10, 2017) நடந்தது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தாலும், பனிப்பொழிவு காரணமாக பகல் 11.30 மணிக்கே போட்டி தொடங்கியது. இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி ஓய்வில் சென்றதால், ஒரு நாள் தொடருக்கு ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். ரஹானே நீக்கப்பட்டு ஸ்ரேயாஸ் அய்யர் முதன்முதலாக ஆடும் லெவனில் இடம் பிடித்தார். டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
இந்திய புலிகளை வீழ்த்தின நியூஸிலாந்து கிவிக்கள்!

இந்திய புலிகளை வீழ்த்தின நியூஸிலாந்து கிவிக்கள்!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ராஜ்கோட்டில் இன்று (நவம்பர் 4, 2017) நடந்த இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியை, நியூஸிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த அணியின் கோலின் முன்ரோ சதம் அடித்து சாதனை படைத்தார். இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ட்வென்டி-20 கிரிக்கெட் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடந்தது. மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில், முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி இந்தியா 1-0 கணக்கில் முன்னிலை பெற்றது. அதனால் இந்த ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் இந்தியாவும், வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நியூஸிலாந்தும் களமிறங்கின. அதிரடி தொடக்கம்: இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் முதன்முதலாக வாய்ப்பு பெற்றார். நியூஸிலாந்து அணியில் டிம் சவுத்தீ, டாம் லேதம் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, கிளைன்
முதல் டுவென்டி-20: ஆஸியை வீழ்த்தியது இந்தியா

முதல் டுவென்டி-20: ஆஸியை வீழ்த்தியது இந்தியா

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு எதிரான ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரை, ஆஸ்திரேலியா அணி ஏற்கனவே 4-1 கணக்கில் இழந்திருந்தது. இதையடுத்து மூன்று டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலாவது டி-20 போட்டி ராஞ்சியில் இன்று (அக்டோபர் 7) நடந்தது. இரவு 7 மணிக்கு போட்டி துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோஹ்லி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தோள் பட்டையில் ஏற்பட்ட வலி காரணமாக அவர் விளையாடவில்லை. டேவிட் வார்னர் கேப்டன் பொறுப்பை ஏற்றார். ஸ்மித்துக்கு மாற்று வீரராக மார்கஸ் ஸ்டாய்னிஸ் இடம் பெற்றார். இந்திய அணியில் ரஹானே, அக்சர் படேல் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, குல்தீப் யாதவ், ஷிகர் தவான் வாய்ப்பு பெற்றனர். வெற்றி பெறும் முனைப்புடன
கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா; ஆஸி.,யின் சோகம் தொடர்கிறது

கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா; ஆஸி.,யின் சோகம் தொடர்கிறது

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்திய அணி  3 - 0 புள்ளி கணக்கில் வென்றது. ஆஸி., அணியின் தோல்வி முகம் தொடர்ந்து வருவது, அந்நாட்டு ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்று உள்ளது. நேற்று (செப். 24) மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மைதானத்தில் மூன்றாவது ஒரு நாள் போட்டி நடந்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியா அணியில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், கார்ட்ரைட் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஆரோன் பின்ச், ஹேன்ஸ்ட்கோம்ப் சேர்க்கப்பட்டு இருந்தனர். ஆரோன் பின்ச் சதம்: டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்ட
டி-20: இலங்கையை கதற விட்டது இந்தியா

டி-20: இலங்கையை கதற விட்டது இந்தியா

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
இலங்கைக்கு எதிரான டுவென்டி டுவென்டி கிரிக்கெட் போட்டியில், கோஹ்லியின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணிக்கு எதிரான ஒரே ஒரு டுவென்டி டுவென்டி கிரிக்கெட் போட்டி நேற்று (செப். 6) கொழும்பு பிரேமாதாசா மைதானத்தில் நடந்தது. பகலிரவு ஆட்டமான இந்தப் போட்டி, மழை காரணமாக 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. இந்திய அணி தரப்பில் ரஹானே, ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு, லோகேஷ் ராகுல், அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டு இருந்தனர். இலங்கை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிக்வெல்லா, கேப்டன் உபுல் தரங்கா ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. தரங்கா 5 ரன்களிலும், டிக்வெல்லா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அந்த அணியில் முனவீரா மட்டும் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இலங்கை அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப
கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா

கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா

உலகம், முக்கிய செய்திகள், விளையாட்டு
பல்லேகெலே: இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்றது. டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் இலங்கை அணி தொடர்ந்து சொதப்பி வந்ததால், அந்நாட்டு ரசிகர்கள் மைதானத்திற்குள் குடிநீர் பாட்டில்கள வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டாலும், இந்திய அணி வென்றதாக அறிவிக்கப்பட்டது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இலங்கை அணியுடன் ஏற்கனவே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணி, தொடரை முழுமையாக வென்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. ஏற்கனவே முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளை வென்று, தொடரில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி, இந்த தொடரையும் முழுமையாக கைப்பற்றும் முனைப்புடன் இன்று (27/8/17) மூன்றாவது போட்டியில் களமிறங்கி