வைத்திலிங்கம் நீக்கம்: டிடிவி அதிரடி
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று ஒன்றாக இணைந்தது. இரு அணிகளும் இணைப்புக்குப் பின்னர் நேற்று மாலை ஊடகங்களிடம் பேசிய எம்பி வைத்திலிங்கம், அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
பொதுச்செயலாளரை நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவிற்குதான் உண்டு என்று அப்போதே வைத்திலிங்கம் கருத்துக்கு தினகரன் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், எடப்பாடி அணியில் உள்ள அமைச்சர் ஓஎஸ் மணியன், வைத்திலிங்கம் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றும், சசிகலா தொடர்பாக யாரும் விவாதிக்கவில்லை என்றும் கூறினார்.
இந்நிலையில் அதிமுகவின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் வைத்திலிங்கத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார். சசிகலாவுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் கட்சிய...