சேலத்தில் சாராய சாம்ராஜ்யம்தான் நடக்குது!; போலீஸ் கமிஷனர் டென்ஷன்
''சேலத்தில் ராம ராஜ்ஜியம் நடப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் சந்துக்கடைகள் மூலமாக மது விற்பனை நடப்பதாக மக்களிடம் இருந்து புகார்களை பார்க்கும்போது என் நம்பிக்கை பொய்த்துவிட்டது. குற்றங்களை தடுக்காத இன்ஸ்பெக்டர்கள் மீது கடுமையான ஆக்ஷன் எடுக்கப்படும்,'' என்று சேலம் போலீஸ் கமிஷனர் சங்கர் எச்சரித்துள்ளார்.
சேலம் மாநகரில் ரவுடிகளின் கொட்டத்தை ஒடுக்குவதற்கு மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து கடந்த பத்து நாள்களாக போலீசார் ரவுடிகளை கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த பரபர ஆக்ஷனில் கடந்த 9ம் தேதி 37 ரவுடிகள் உள்பட 57 பேரும், 12ம் தேதி 39 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் அன்னதானப்பட்டியைச் சேர்ந்த பிரபல ரவுடிகள் ஜவஹர், அறிவு என்கிற அறிவழகன், மணியனூர் வைத்தி, கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சுலைமான், ஜான், டெனிப...