திரை இசையில் வள்ளுவம்: படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா…! #தொடர்
பொய்யாமொழிப் புலவன் வள்ளுவன் அறம், பொருளைவிட காமத்துப்பாலில்தான் அதீத கற்பனை ஊற்றெடுக்க பாடல்களை புனைந்துள்ளான். இதை நாம் கடந்த தொடரிலேயே சொல்லி இருக்கிறோம். சினிமாக்காரர்கள் மொழியில் சொல்வதென்றால் வள்ளுவர், 'கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் காமத்துப்பாலில்தான் இறக்கி வெச்சிருக்காரு,' போலருக்கு.
காதலை நோய் என்ற வள்ளுவன்தான், பெண்ணை மான் என்றான்; மயில் என்றான்; தெய்வம் என்றான்; எமன் என்றும் சொன்னான். ஓரிடத்தில் அவன், 'பெண்களை புரிந்து கொள்ள முடியாத தீ' என்றும் கூறுகிறான். உங்களிடம் ஒரு கேள்வி. நெருப்பின் அருகில் சென்றால் என்ன நடக்கும்?. உடல் சூடாகும் அல்லவா!. அதேநேரம் நெருப்பை விட்டு சற்று தொலைவு விலகிச் சென்றால் உடல் குளிரும் அல்லவா? இதுதான் இயல்பு.
ஆனால், இயற்கைக்கு முரணான இயல்புடன் கூடியவர்களாக பெண்கள் இருக்கிறார்கள் என வள்ளுவன் ஆச்சர்யம் மேலிட சொல்கிறான். உலகளந்த வள்ளுவனுக்கு, ...