Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: house

அரசியல் அரங்கை தெறிக்கவிட்ட மோடி – கருணாநிதி சந்திப்பு!

அரசியல் அரங்கை தெறிக்கவிட்ட மோடி – கருணாநிதி சந்திப்பு!

அரசியல், இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் விரைவில் தீர்ப்பு, நிலைகுலைந்த அதிமுக அரசாங்கம் போன்ற சூழலில் பிரதமர் நரேந்திர மோடி திடீரென்று திமுக தலைவர் கருணாநிதியை இன்று (நவம்பர் 6, 2017) கோபாலபுரம் இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து இருப்பது அரசியல் அரங்கில் பல்வேறு யூகங்களை எழுப்பி இருக்கிறது. தமிழக சட்டப்பேரவைக்குள் எந்த வகையிலாவது நுழைந்து விட வேண்டும் என்பதுதான் பாஜகவின் ஒரே குறிக்கோள். கிட்டத்தட்ட இந்தியாவின் 75 சதவீத பகுதிகளை தன் ஆளுகைக்குள் கொண்டு வந்துவிட்ட பாஜகவுக்கு தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு கடுமையான சவால்களை கொடுத்து வருகிறது. ஆட்சியைப் பிடிப்பது பெருங்கனவு; இப்போதைக்கு ஒன்றிரண்டு பேரையாவது எம்எல்ஏ ஆக்குவோம் என்பதுதான் அ க்கட்சியின் திட்டம். செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வெளியில் இருந்தே இன்னும் எவ்வளவு நாள்தான் கூவிக்கொண்டிருக்க முடியும்?. பாஜகவின் திட்டங்களை செயல்படுத்துவதற...