நடிகர் ‘அல்வா’ வாசு கவலைக்கிடம்
தமிழின் முன்னணி நகைச்சுவை, குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான அல்வா வாசு உடல்நலம் கவலைக்கிடமான நிலையில் உள்ளது.
மறைந்த இயக்குநரும், நடிகருமான மணிவண்ணனிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, பின்னர் நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் முத்திரை பதித்தவர் அல்வா வாசு. அமைதிப்படை, சிவாஜி, கருப்பசாமி குத்தகைதாரர், எல்லாம் அவன் செயல் உள்பட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக, நடிகர் வடிவேலுவின் காமெடி கூட்டணியில் இணைந்து நடித்த பல நகைச்சுவை காட்சிகள் மக்களிடம் பெரிய அளவில் அல்வா வாசுவை கொண்டுபோய் சேர்த்தன.
கடந்த சில மாதங்களாக கல்லீரல் பாதிப்பால் சிகிச்சையில் இருந்து வந்த அவர், படங்களில் நடிப்பதையும் குறைத்துக்கொண்டார். சமீபத்தில் அவர் நடித்த சில படங்களிலும் உடல் அளவில் மெலிந்து காணப்பட்டார்.
கல்லீரல் பிரச்னைக்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ஆறு மாதங்களுக்கும்...