Saturday, December 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: historical society

உடன்கட்டை ஏறிய தமிழ்ப்பெண்கள்! ‘சதி’ கல் சொல்லும் சேதி!! #Sati #Nadukal

உடன்கட்டை ஏறிய தமிழ்ப்பெண்கள்! ‘சதி’ கல் சொல்லும் சேதி!! #Sati #Nadukal

சேலம், தமிழ்நாடு, முக்கிய செய்திகள், வரலாறு
  கணவன் இறந்தால் அவனோடு மனைவியும் எரியும் சிதையில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ளும் சதி என்னும் உடன்கட்டை ஏறும் நடைமுறை தமிழ்ச்சமூகத்திலும் இருத்திருக்கிறது என்பதற்கான நடுகற்கள் கண்டறியப்பட்டு உள்ளன.   உடன்கட்டை என்றாலே நமக்கான அண்மைய வரலாற்றில் அடிபடும் ஒரே பெயர் ராஜாராம் மோகன் ராய்தான். வங்கத்தில் பிறந்த அவர், சதி என்னும் பெண்கள் உடன்கட்டை ஏறும் அவலத்தை அடியோடு ஒழிக்க பெரிதும் பாடுபட்டார். அவருடைய தொடர் முயற்சிகளால், 1833ம் ஆண்டில் அப்போதைய வங்க ஆளுநர் வில்லியம் பெண்டிங் பிரபு 'சதி'யை ஒழித்து சட்டம் கொண்டு வந்தார். வங்கம் மட்டுமின்றி ராஜஸ்தானிலும் சதி நடைமுறை அதிகமாக இருந்தது.   உண்மையில் தமிழ்ச்சமூகத்திலும் பரவலாக உடன்கட்டை ஏறும் பழக்கம் இருத்திருக்கிறது. பூதப்பாண்டியனின் ஈமத்தீயில் மனைவி பெருங்கோப்பெண்டு பாய்ந்து இறந்ததாக புறநானூற்றுப்பாடல் (246) ஒன்றில் ...