அதிமுக அரசுக்கு ஆதரவா?; ‘பொடி’ வைக்கும் புதிய ஆளுநர்
கடந்த ஓராண்டுக்கும் மேலாக தமிழக ஆளுநர் பொறுப்பில் இருந்த வித்யாசாகர் ராவ் நேற்று விடைபெற்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவரை முறைப்படி வழியனுப்பி வைத்தனர்.
பதவி ஏற்பு:
அதையடுத்து, தமிழக புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோஹித், ராஜ் பவனில் இன்று (அக்டோபர் 6) முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பன்வாரிலால் புரோஹித்தின் மனைவியும் கலந்து கொண்டார்.
பதவியேற்பு முடிந்ததும் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
மு.க.ஸ்டாலின் அதிருப்தி:
முதல்வர், துணை முதல்வர் ஆகியோரைத் தொடர்ந்து மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவரான மு.க.ஸ்டாலின்தான் ஆளுநருக்கு வாழ்த்துச் சொல்ல அழைக்கப்பட வேண்ட...