”அரசியலில் ரஜினி உடன் இணைந்து செயல்பட தயார்!” – கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி
அரசியல் களத்தில் ரஜினியுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் ரிபப்ளிக் டிவி என்ற ஹிந்தி சேனலுக்கு அளித்திருந்த பிரத்யேக பேட்டி இன்று (நவம்பர் 12, 2017) பகல் 11 மணிக்கு ஒளிப்பரப்பப்பட்டது.
நெறியாளர் அர்னாப் கோஸ்வாமி, நம்ம ஊர் தமிழ் சேனல்களில் சொல்வதுபோல் தீவிரவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் அர்த்தம் தெரியாமல் குழப்பத்திலேயே இருந்தார். கமல்ஹாசனை, இந்து விரோதி என்பதை சித்தரிக்க ரொம்பவே மெனக்கெட்டார். லஷ்கர்-இ-தொய்பா வரை வம்பில் சிக்கிவிடவும் முயற்சித்தார்.
அர்னாப் கோஸ்வாமி மோடியின் பக்கவாத்தியம்போல பேசியதையும், இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி போல பேசியதையும் அவதானிக்க முடிந்தது. அவர் எதிர்பார்த்த பதில்களைப் பெற முடியாமல், ஒருகட்டத்தில் ஏமாற்றம்...