Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Hindu Maha Sabha

”கமல்ஹாசனை சுட்டுக் கொல்வோம்”!:  இந்து மகா சபா மிரட்டல்

”கமல்ஹாசனை சுட்டுக் கொல்வோம்”!: இந்து மகா சபா மிரட்டல்

அரசியல், இந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
ஹிந்துக்களுக்கு எதிராக பேசும் கமல்ஹாஸனையும், அவரைப் போன்றவர்களும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்று அகில பாரத இந்து மகாசபா தேசியத் துணைத்தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா மிரட்டல் விடுத்துள்ளார். நடிகர் கமல்ஹாஸன் சில நாள்களுக்கு முன், 'தமிழ்நாட்டில் இந்து தீவிரவாதம் ஊடுருவிட்டது. இந்து தீவிரவாதிகள் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான்' வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார். இதற்கு பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. உத்தரபிரதேசத்தில் கமல்ஹாஸன் மீது மதத்திற்கு எதிராக அவதூறு பரப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதற்கிடையே அகில பாரத இந்து மகாசபாவின் தேசிய துணைத்தலைவர் பண்டிட் அசோக் ஷர்மா, மீரட் நகரில் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: கமல்ஹாஸனும் அவரைப் போன்றவர்களும் சுட்டுக்கொல்லப்பட வேண்டும் அல்லது தூக்கிலிடப...