சிண்டிகேட் கூட்டம்: முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த பெரியார் பல்கலை! #PeriyarUniversity
உதவி பேராசிரியர் பணி நியமனங்களில் விதிமீறல், போலி அனுபவச் சான்றிதழ்கள், கல்வித்தகுதிகள் குறித்து தணிக்கை அறிக்கையில் ஆட்சேபனைகள் எழுந்துள்ள நிலையில், அதுகுறித்த விவரங்களை பெரியார் பல்கலை நிர்வாகம் உயர்கல்வித்துறை செயலருக்கு தெரிவிக்காமல் மறைத்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
101வது சிண்டிகேட் குழு கூட்டம்
சேலம் பெரியார் பல்கலையில் 101வது சிண்டிகேட் குழு கூட்டம் ஆட்சிக்குழு அரங்கத்தில் நேற்று (செப். 29, 2018) நடந்தது. உயர்கல்வித்துறை செயலராக அண்மையில் நியமிக்கப்பட்டு உள்ள மங்கத்ராம் ஷர்மா, நேற்றைய கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இதற்காகவே அவர், சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு காலை 11.15 மணியளவில் வந்து சேர்ந்தார். அங்கிருந்து கார் மூலம் பல்கலைக்கு அழைத்து வரப்பட்டார். இதனால் வழக்கத்தைவிட சற்...