பெரியார் பல்கலை.: தேர்வாணையர், பதிவாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு! வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படுமா?
சேலம் பெரியார் பல்கலையில் புதிதாக தேர்வாணையர், பதிவாளர் பதவிகளுக்கான நியமன வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், இந்த முறையாவது வெளிப்படைத்தன்மையுடன் இப்பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்று பேராசிரியர்கள் தரப்பில் பலத்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கும் ஊழல் முறைகேடுகளுக்கும் அத்தனை நெருங்கிய தொடர்போ என்னவோ.... நிர்வாகம் மேற்கொள்ளும் எந்த ஒரு நடவடிக்கையிலும் வில்லங்கமும் சேர்ந்தே இணைந்து கொள்கிறது. அண்மைக்காலமாக ஊழலுடன் சாதிய பற்றும் சேர்ந்து கொண்டுள்ளது.
தேர்வாணையர், பதிவாளர் பதவிகளுக்கான அறிவிப்புதான் லேட்டஸ்ட் வில்லங்கம். இந்தப் பல்கலையில் தேர்வாணையராக பணியாற்றி வந்த பேராசிரியர் லீலா, 2018, பிப்ரவரி மாதம் பணி நிறைவு பெற்றார்.
அவருடைய பதவிக்காலம் முடிவடைவதற்கு சில மாதங்கள் முன்பே அதாவது கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதமே, புதிய தேர்வாணையரை...