டி-20 கிரிக்கெட்: இந்திய தலைகள் உருண்டன; ஆஸி. அசத்தல் வெற்றி
கவுகாத்தியில் நடந்த ஆஸி. அணிக்கு எதிரான இரண்டாவது டுவென்டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் கைகொடுக்காததால், 8 விக்கெட்டில் ஆஸி அணியிடம் தோல்வியைத் தழுவியது.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரை 4-1 என இழந்தது. இந்நிலையில் இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது.
முதல் டி-20 போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றியை பதிவு செய்தது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி கவுஹாத்தியில் இன்று (அக். 10) நடந்தது. இதில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் வார்னர், முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
தலைகள் உருண்டன:
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா (8), ஷிகர் தவான் (2), விராட் கோலி (0), மனீஷ் பாண்டே (6) என ‘டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்களை, ஆஸி பந்து வீச்சாளர் பெஹர்டெண்டிராப் பெவிலியனுக்க...