பெரியார் பல்கலை: கல்வி ஆண்டின் முதல் நாளிலேயே சலசலப்பு ஆரம்பம்!
பெரியார் பல்கலையில், கல்வி ஆண்டின் முதல் நாளிலேயே மூத்த பேராசிரியர்கள் சிலர் துறைத்தலைவர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியதால் துணை வேந்தர் கடும் அதிருப்தி அடைந்தார்.
சேலம் பெரியார் பல்கலையில் 2018-19ம் கல்வி ஆண்டின் முதல் நாள் வகுப்புகள் ஜூலை 2ம் தேதி தொடங்கின. இதையொட்டி, அன்றைய தினம் பல்கலையில் பணியாற்றும் அனைத்து உதவி, இணை பேராசிரியர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்ட கூட்டம், துணை வேந்தர் கொழந்தைவேல் தலைமையில் நடந்தது.
செனட் அரங்கத்தில் நடந்த இந்தக் கூட்டம், பகல் 12 மணிக்கு தொடங்கி 1.45 மணியளவில் நிறைவு பெற்றது. கூட்ட நிகழ்வுகள் வெளியே 'லைவ்' ஆக தெரிந்து விடக்கூடாது என்பதற்காக அனைவரின் செல்போன்களும் கூட்டம் முடியும் வரை செயல்படாத வகையில் ஜாமர் கருவி மூலம் முடக்கப்பட்டது.
ஆராய்ச்சி தொடர்பாக வெளிநாடு செல்லும் பேராசிரியர்களுக்கு 50 சதவீதம் உதவித்தொகை வழங்கப்பட...