கிரிக்கெட்: தொடரை வென்றது இந்தியா; ஆஸி.,யின் சோகம் தொடர்கிறது
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை இந்திய அணி 3 - 0 புள்ளி கணக்கில் வென்றது. ஆஸி., அணியின் தோல்வி முகம் தொடர்ந்து வருவது, அந்நாட்டு ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வென்று உள்ளது. நேற்று (செப். 24) மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மைதானத்தில் மூன்றாவது ஒரு நாள் போட்டி நடந்தது.
இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலியா அணியில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட், கார்ட்ரைட் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஆரோன் பின்ச், ஹேன்ஸ்ட்கோம்ப் சேர்க்கப்பட்டு இருந்தனர்.
ஆரோன் பின்ச் சதம்:
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித், முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க ஆட்ட...