Tuesday, December 3மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: handloom weavers

சர்வோதய சங்கங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்; நெசவாளர்களை சுரண்டும் கும்பல்! ஆதாரங்களுடன் அம்பலம்!!

சர்வோதய சங்கங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல்; நெசவாளர்களை சுரண்டும் கும்பல்! ஆதாரங்களுடன் அம்பலம்!!

குற்றம், கோயம்பத்தூர், சென்னை, தூத்துக்குடி, தேனி, முக்கிய செய்திகள், வேலூர்
தமிழகத்தில், சர்வோதய சங்கங்களில் கைத்தறி நெசவாளர்கள் பெயரில் போலி உறுப்பினர்களைச் சேர்த்து, பல ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டப்பட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உண்மையான கைத்தறி நெசவாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய கூலி, போனஸ் தொகையை காலங்காலமாக ஒரு கும்பல் கூட்டு சேர்ந்து சுரண்டி வந்துள்ளன.   மத்திய அரசின் கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) கீழ், தமிழ்நாட்டில் மொத்தம் 70 சர்வோதய சங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்த துறை, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கட்டுப்பாட்டில் உள்ளது. கையால் நூற்ற நூலை, கையாலும் காலாலும் நெய்யப்படும் துணிதான் கதர். அப்படியான கதர் துணி நெசவாளர்கள் மற்றும் கிராம கைவினைஞர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருள்களை சந்தைப்படுத்த சர்வோதய சங்கங்கள் தொடங்கப்பட்டன. மொத்தமுள்ள சங்கங்களில் நாலைந்து தவிர ஏனைய சர்வோதய சங்கங்கள் கதர் துணிமண...
சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நூதன மோசடி! கஞ்சிக்கே வழியில்லாத நெசவாளர்கள் வயிற்றில் அடித்த நிர்வாகம்!!

சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் நூதன மோசடி! கஞ்சிக்கே வழியில்லாத நெசவாளர்கள் வயிற்றில் அடித்த நிர்வாகம்!!

சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு வேளை கஞ்சிக்கே வழியில்லாமல் திண்டாடிய கைத்தறி நெசவாளர்களை நூதன முறையில் சுரண்டி மோசடியில் ஈடுபட்டுள்ளது, சேலம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம்.   சேலம் 2ஆம் அக்ரஹாரத்தில், 1956ம் ஆண்டு முதல் சேலம் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.   இக்கூட்டுறவு சங்கத்தில் 1558 கைத்தறி நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் வெண்பட்டு வேஷ்டி, சட்டைத்துணி, அங்கவஸ்திரம் ஆகியவற்றை சங்கம் நேரடியாக கொள்முதல் செய்து விற்பனை செய்கிறது.   இதற்காக சங்க உறுப்பினர்களுக்கு மாதத்திற்கு ஒரு பாவு, அதற்குரிய கோரா பட்டு நூல் ஆகியவற்றை வழங்குகிறது. ஒரு பாவு மூலம் பத்து வெண்பட்டு வேஷ்டிகளை உற்பத்தி செய்ய முடியும். ஒரு வேஷ்டியின் கொள்முதல் விலை 750 ரூபாய்.   ஒரு குடும்...
சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஊழல்! நெசவாளர்களின் ரத்தத்தையும் உறிஞ்சிய அதிமுக பிரமுகர்கள்!!

சேலம் பட்டு கூட்டுறவு சங்கத்தில் ஊழல்! நெசவாளர்களின் ரத்தத்தையும் உறிஞ்சிய அதிமுக பிரமுகர்கள்!!

குற்றம், சிறப்பு கட்டுரைகள், சேலம், முக்கிய செய்திகள்
சேலத்தில், பட்டு நெசவாளர்கள் கைத்தறி கூட்டுறவு சங்கத்தில் சரக்கு விற்பனை இருப்பில் 1.10 கோடி ரூபாய்க்கு மேல் போலி முறைகேடு செய்திருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த நூதன மோசடி மூலம் ஆளும் அதிமுக பிரமுகர்கள் நெசவாளர்களின் ரத்தத்தையும் உறிஞ்சி குடித்திருப்பதாக குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.   சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில், 'சேலம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் லிமிடெட்' என்ற பெயரில் கூட்டுறவு நிறுவனம் 1956ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. கைத்தறியால் நெய்யப்பட்ட வெண்பட்டு வேட்டி, சட்டை, அங்கவஸ்திரத்திற்கு உலகளவில் பெயர் பெற்றது இந்நிறுவனம். இதில் தற்போது, 1558 நெசவாளர்கள் 'ஏ' வகுப்பு உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில், 1150 நெசவாளர்கள் தொடர்ந்து வெண்பட்டு உருப்படிகளை நெய்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் ஆண்டு விற்பனை சராசரியாக 12 கோடி ரூபாய். கடைசிய...