சேலம்: கூட்டுறவு உதவியாளர் பணிக்கு தேர்வு; நவ. 23, 24ல் நடக்கிறது!
சேலம் மாவட்ட
மத்திய கூட்டுறவு
வங்கி மற்றும் இதர
கூட்டுறவு அமைப்புகளில்
காலியாக உள்ள உதவியாளர்
பதவிக்கான போட்டித்தேர்வு
நவ.23, 24 ஆகிய
நாள்களில் நடக்கிறது.
சேலம் மாவட்ட
மத்திய கூட்டுறவு வங்கி
தலைமை அலுவலகம்
மற்றும் அதன் கிளைகளில்
காலியாக உள்ள 89 உதவியாளர்
பணியிடங்கள், போட்டித்தேர்வு
மற்றும் நேர்முகத்தேர்வு மூலம்
நிரப்பப்பட உள்ளன. இதற்கான
அறிவிப்பு, கடந்த
28.8.2019ம் தேதி
(அறிவிக்கை எண்: 02/2019)
வெளியிடப்பட்டது.
அதேபோல்,
மத்திய கூட்டுறவு வங்கி
தவிர இதர நகர கூட்டுறவு
வங்கிகள், கூட்டுறவு
சங்கங்களில் காலியாக
உள்ள 52 உதவியாளர்
பணியிடங்களும்
மேற்சொன்ன தேர்வு
முறைகள் மூலம்
நிரப்பப்பட உள்ளன.
இதுகுறித்த அறிவிப்பும்
மேற்கண்ட தேதியில்
(அறிவிக்கை எண்: 01/2019)
வெளியிடப்பட்டது.
இனசுழற்சி உள்ளிட்ட
அனைத்து இடஒதுக்கீடு
விதிமுறைகளின்படி
இப்பணியிடங...