அதிமுக: சசிகலாவை நீக்க முடியுமா?
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாணப் பத்திரங்களில் அதிமுக பொதுச்செயலாளர் என சசிகலா கையெழுத்திட்டு உள்ள நிலையில், அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தினகரன் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் மாறி மாறி முண்டா தட்டுவதால், உச்சக்கட்ட குழப்பத்தில் அதிமுக உள்ளது.
அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று (28/8/17) காலை நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் ஊடகங்களை கட்சியே ஏற்று நடத்துவது, தினகரனால் நியமிக்கப்பட்ட பதவிகள் செல்லாது, தினகரனை கட்சியை விட்டு நீக்க வேண்டும், விரைவில் பொதுக்குழு&செயற்குழுவைக் கூட்டுவது என நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தீர்மானத்தில், சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் நியமிக்கப்பட்டது தற்காலிகமானது என்றும், அவருடைய நியமனத்தை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை என்றும் குறிப்பிட...