சேலம்: மூதாட்டிகளை பட்டினி போட்ட கலெக்டர் ரோகிணி! அப்படி என்னம்மா கின்னஸ் ரெக்கார்டு பண்ணீட்டிங்க? #CollectorRohini
சேலத்தில், உலக கைகழுவும் தின கின்னஸ் சாதனைக்காக ஊரக வேலைத்திட்ட பெண்கள், மூதாட்டிகளை பொய்யான வாக்குறுதிகளை அளித்து, கட்டாயப்படுத்தி அழைத்து வந்ததுடன், காலை உணவின்றி பட்டினி போட்ட அலங்கோலங்கள் அரங்கேறியிருக்கின்றன.
ஆண்டுதோறும் அக்டோபர் 15ம் தேதி, உலக கை கழுவும் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, நேற்று (அக்டோபர் 15, 2018) சேலம் சோனா பொறியியல் கல்லூரி திடலில் உலக கைகழுவும் தின கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உண்மையில் இப்படி ஒரு நிகழ்ச்சியை எந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது எனத் தெரியவில்லை.
இந்த நிகழ்ச்சிக்கு, சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி, காலை 9.30 மணிக்கு நடைபெறும் என மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியை கால...