Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: GST tax

குஜராத், ஹிமாச்சலில் பாஜக வெற்றி!; காரணம் என்ன?; சரிகிறதா  மோடி இமேஜ்?

குஜராத், ஹிமாச்சலில் பாஜக வெற்றி!; காரணம் என்ன?; சரிகிறதா மோடி இமேஜ்?

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
குஜராத் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்ததிலும், ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியதிலும் பாஜக அபாரமாக வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், சொந்த மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு வெகுவாக சரிந்திருப்பதையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தொடர்ந்து 6வது முறையாக ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 182 தொகுதிகளில் பாஜக 99 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 77 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. சுயேட்சைகளுக்கு 6 இடங்கள் கிடைத்து இருக்கின்றன. ஹிமாச்சல்பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் பாஜக 44 இடங்களிலும், ஆளுங்கட்சியான காங்கிரஸ் 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. சுயேட்சைகள் 3 தொகுதிகளில் வென்றுள்ளனர். ஹிமாச்சல் பிரதேசத்தை க
”நம்புங்கள் பிரதமரே!  முயலுக்கு நான்கு கால்கள்தான்!!”

”நம்புங்கள் பிரதமரே! முயலுக்கு நான்கு கால்கள்தான்!!”

அரசியல், இந்தியா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்பு  (Demonetisation) நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவு அடைந்துள்ள நிலையில், சமூகவலைத்தளங்களில் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பலர் கேலி, கிண்டலாக மீம்ஸ்கள் மூலம் கருத்துகளை பதிவிட்டு உள்ளனர். இரவு நேரத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த வயதிலும் அப்படி என்னதான் பற்றுதலோ தெரியவில்லை. இப்படிச் சொல்வது கொஞ்சம் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஸ்டைல் போலத் தோன்றினாலும் யாரும் அனர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டாம். அவர் நாட்டை உலுக்கும் எந்த முடிவாக இருந்தாலும் இரவில்தான் அறிவிக்கிறார். பணமதிப்பிழப்பு முதல் ஜிஎஸ்டி வரை எல்லாமே இரவில்தான் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. 1000 ரூபாய், 500 ரூபாய் தாள்கள் செல்லாது என அறிவிக்கப்படுவது குறித்து எனக்குக்கூட தெரியாது என அப்பாவியாகச் சொன்னார் நிதியமைச்சர் அருண்ஜெட்லி. ரிசர்வர் வங்கி ஆளுநருக்கே கூட அறிவிப்புக்கு சற்று முன்னர்தான் தெரி
ரஜினிக்கு சொந்த வீட்டிலேயே கடும் எதிர்ப்பு;  லதா ரஜினிகாந்த் வழக்கு!

ரஜினிக்கு சொந்த வீட்டிலேயே கடும் எதிர்ப்பு; லதா ரஜினிகாந்த் வழக்கு!

இந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
பணமதிப்பிழப்புத் திட்டத்தை நரேந்திர மோடி அறிவித்தபோது, அதை வரவேற்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், அந்த திட்டத்தால்தான் வருமானம் பாதிக்கப்பட்டதாக அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டை சி.பி. ராமசாமி சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், இந்த வளாகத்தில் உள்ள ஒரு கடையை வாடகைக்கு எடுத்து, அதில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருகிறார். இதற்காக அந்தக் கடைக்கு அவர் மாதம் 3,702 ரூபாய் வாடகை செலுத்தி வந்தார். இந்த நிலையில், சென்னை மாநகராட்சி கடந்த ஜூன் மாதம் கடையின் வாடகையை உயர்த்தியது. இதுகுறித்து மாநகராட்சி சார்பில் லதா ரஜினிகாந்திற்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸில், மார்ச் மாதம் முதல் 21,160 ரூபாய் வாடகை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை
விஜய் பட விவகாரம்: வக்கீலை மெர்சலாக்கிய ஹைகோர்ட்!

விஜய் பட விவகாரம்: வக்கீலை மெர்சலாக்கிய ஹைகோர்ட்!

சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
மதுபானம், தீண்டாமை என்று எவ்வளவு பிரச்னை இருக்கும்போது அதையெல்லாம் விட்டுவிட்டு மெர்சல் படத்திற்கு தடை விதிக்க வழக்கு தொடர்ந்து, அந்தப்படத்திற்கு விளம்பரம் தேடித்தர வேண்டாம் என்று உயர்நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில், ஜிஎஸ்டி வரி விதிப்பு, டிஜிட்டல் இந்தியா பற்றிய வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இது போன்ற வசனங்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருப்பதாகவும், அந்தப் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அஸ்வத்தாமன் என்ற வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு இன்று (அக்டோபர் 27, 2017) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கறிஞரிடம் பல கேள்விகளை எழுப்பியதோடு, கடும் கண்டனங்களையும் தெரிவித்தார். நாட்டுக்கு முக்கியமா? அப்போது நீதிபதி கூறுகையில், ''இந்திய அரசியலமைப்பிற்கு உட்பட்ட கருத்