மாணவர்களை ஈர்த்த சேலம் புத்தகத்திருவிழா! ”கல்கி, சாண்டில்யன் படைப்புகளுக்கு வரவேற்பு” #SalemBookFestival
சேலத்தில் நடந்து வரும் புத்தக திருவிழாவுக்கு பெரியவர்களைக் காட்டிலும் பள்ளி மாணவர்கள் அதிகளவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, புத்தகங்களை வாங்கிச்செல்வது பதிப்பாளர், புத்தக விற்பனையாளர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்டுத்தி உள்ளது.
முதன்முதலாக
சேலத்தில் ஆண்டுதோறும் நியூ செஞ்சுரி புத்தக நிலையம் சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே, புத்தகக் கண்காட்சி நடத்தி வருகிறது. இந்த ஆண்டு முதன்முதலாக சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணியின் முயற்சியால், பபாசி எனப்படும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துடன் இணைந்து பிரம்மாண்ட புத்தகத் திருவிழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
21ம் தேதி வரை திருவிழா
சேலம் போஸ் மைதானத்தில் கடந்த 9.11.2018ம் தேதி 1வது சேலம் புத்தகத்திருவிழா தொடங்கியது. வரும் 21ம் தேதி வரை இத்திருவிழா நடக்கிறது. காலை 11 மணி முதல் இரவு ...