”தப்பு செய்தால் தெருவை கூட்டணும்!”; அரசுப்பள்ளி மாணவிகளுக்கு நூதன தண்டனை!!
-சிறப்பு செய்தி-
சேலம் அருகே, வகுப்பறையில் குப்பை போடும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு தெரு கூட்டும் நூதன தண்டனை வழங்கப்படுவதால் அப்பகுதி மக்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சேலத்தை அடுத்த ராமலிங்கபுரத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ராமலிங்கபுரம், சின்னகவுண்டாபுரம், பெரியகவுண்டாபுரம், ஏரிக்காடு, ராம்நகர், பாப்பநாயக்கன்காடு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். 6 முதல் 10ம் வகுப்பு வரை 250 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆறாம் வகுப்பிற்கு மட்டும் வழக்கமான தமிழ் வழி மட்டுமின்றி, ஆங்கில வழியிலும் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது.
இந்தப் பள்ளியில், வகுப்பறையில் குப்பை போடும் மாணவ, மாணவிகளுக்கு தெருவை கூட்டி சுத்தப்படுத்தும் நூதன தண்டனையை ஆசிரியர்கள் ...