Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: Google

2024ல் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? யாரை?

2024ல் இந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? யாரை?

இந்தியா, முக்கிய செய்திகள்
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கூகுள் தேடு பொறியில் உலக நாடுகள் அதிகம் தேடிய நிகழ்வுகள், பிரபலங்கள், விவகாரங்கள் குறித்து பட்டியல் வெளியிட்டு வருகிறது. எந்தெந்த சொற்களை அதிகமாக பயனர்கள் தேடினர் என்ற விவரங்களையும் ஆவணப்படுத்துகிறது கூகுள். நாம் இப்போது,நடப்பு 2024ஆம் ஆண்டின்இறுதிப் பகுதியில் இருக்கிறோம்.இந்த ஆண்டில் இந்தியர்கள்ஐபிஎல் கிரிக்கெட் முதல்ரத்தன் டாடா வரைகூகுள் தேடு பொறியில்அதிகமாக தேடித்தேடிபடித்திருக்கிறார்கள் என்பதுதெரிய வந்துள்ளது.இந்தியாவைப் பொறுத்தவரைகிரிக்கெட், அரசியல், பிரபலங்களைப் பற்றிதெரிந்து கொள்வதுதான் கூகுளில்ஆதிக்கம் செலுத்தி இருக்கின்றன. கூகுள் நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, ஐபிஎல் கிரிக்கெட், டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவை 2024ஆம் ஆண்டில், இந்தியாவில் அதிகம் பேரால் தேடப்பட்ட முக்கிய வார்த்தைகளில் அடங்கும். இது, கிரிக்கெட் மற்றும்...
ஒரே நாளில் 34% விலை ஏறிய வோடபோன் ஐடியா பங்குகள்! கூகுள் பேச்சுவார்த்தை எதிரொலி!!

ஒரே நாளில் 34% விலை ஏறிய வோடபோன் ஐடியா பங்குகள்! கூகுள் பேச்சுவார்த்தை எதிரொலி!!

முக்கிய செய்திகள், வர்த்தகம்
கூகுள் நிறுவனம், வோடபோன் ஐடியா நிறுவனத்தில் கணிசமான பங்குகளை வாங்க உள்ளதாக பேச்சுகள் எழுந்ததை அடுத்து, மே மாத கடைசி வர்த்தக நாளில் இந்நிறுவனத்தின் பங்குகள் 34 சதவீதம் வரை அதிரடியாக உயர்ந்தது. இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, தன்னுடைய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கணிசமான பங்குகளை அண்மையில் பேஸ்புக், சில்வர் லேக், விஸ்டா ஈக்விட்டி, ஜெனரல் அட்லாண்டிக் ஆகிய நிறுவனங்களுக்கு விற்றதன் மூலம் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டினார்.   பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மீது பார்வையைச் செலுத்திய நிலையில், உலகின் மற்றொரு டிஜிட்டல் ஜாம்பவனான கூகுள் நிறுவனமும், இந்திய தொலைதொடர்புத் துறையில் கால் பதிக்க ஆர்வம் காட்டுகிறது.   கூகுள் நிறுவனம், வோடபோன் ஐடியா நிறுவனத்திடம் இருந்து 5 சதவீத பங்குகளை வாங்க திட்டமிட்டு இரு...
தமிழ் மொழியை அங்கீகரித்த கூகுள் ஆட்சென்ஸ்!

தமிழ் மொழியை அங்கீகரித்த கூகுள் ஆட்சென்ஸ்!

இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
இணைய உலகில் மிகப்பெரும் தேடியந்திரமாக உள்ள கூகுள், தனது ஆட்சென்ஸ் (AdSense) மூலமாக இதுவரை 42 மொழிகளுக்கு அங்கீகாரம் அளித்து இருந்தது. ஆட்சென்ஸ் அங்கீகாரம் பெற்ற மொழிகளில் வெளிவரும் இணையதளங்களுக்கு மட்டுமே கூகுள் நிறுவனம் விளம்பரங்கள் வழங்கி வந்தது. அதேநேரம், உலகளவில் 10 கோடி பேருக்கும் மேலான மக்களால் பேசப்பட்டு வரும் தமிழ் மொழிக்கு இதுவரை கூகுள் ஆட்சென்ஸ் அங்கீகாரம் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது தமிழ் மொழிக்கும் அங்கீகாரம் அளித்துள்ளது. கடந்த பிப்ரவரி 9, 2018ம் தேதி இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதன்மூலமாக தமிழுக்கு புதிய பொருளாதார கதவுகள் திறந்துள்ளதாகக் கூறலாம். இனி உலகின் பல மூலைகளிலும் உள்ள தமிழர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வந்த தொடர் முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே ஆட்சென்ஸின் அங்கீகாரம் பார்க்கப்படுகிற...
வாட்ஸ்ஆப் சேவை டிசம்பர் 31உடன் முடிவுக்கு வருகிறது!; எந்தெந்த போன்களில் தெரியுமா?

வாட்ஸ்ஆப் சேவை டிசம்பர் 31உடன் முடிவுக்கு வருகிறது!; எந்தெந்த போன்களில் தெரியுமா?

இந்தியா, உலகம், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்
உலகம் முழுவதும் தவிர்க்க முடியாத தகவல் பரிமாற்ற ஊடகமாக வாட்ஸ்ஆப் செயலியின் சேவை உருப்பெற்று உள்ளது. நாள்தோறும் இதன் சேவையை 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்துகின்றனர். மாதந்தோறும் சராசரியாக வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 1.3 பில்லியனாக அதிகரித்துள்ளது. நாள்தோறும் 55 பில்லியன் செய்திகள், இதன்மூலமாக பகிரப்படுகிறது. ஒரு பில்லியன் படங்களும் தினமும் பகிரப்பட்டு வருகின்றன. வாட்ஸ்ஆப் செயலி பயன்பாட்டுக்கு வந்த புதிதில் சந்தையில் விற்கப்பட்ட 75 சதவீத மொபைல் போன்களின் இயங்குதளங்கள் பிளாக்பெர்ரி, நோக்கியா நிறுவனத்தினுடையதாக இருந்தது. இயங்குதளங்கள் அவ்வப்போது மேம்படுத்தப்பட்டு வருகிறது. இப்போதுள்ள மொபைல் போன்களில் கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் நிறுவனத்தின் இயங்குதளங்களே அதிகளவில் பயன்பாட்டில் உள்ளன. அதற்கேற்றாற்போல் வாட்ஸ்ஆப் செயலியின் இயங்குதளமும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ள...
பிரபல இயற்பியல் விஞ்ஞானிக்கு கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!

பிரபல இயற்பியல் விஞ்ஞானிக்கு கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!

உலகம், கல்வி, முக்கிய செய்திகள், விஞ்ஞானம்
குவாண்டம் இயக்கவியல் துறையில் அளப்பரிய சாதனை படைத்த இயற்பியலாளர் மேக்ஸ் பார்ன்-ன் 135வது பிறந்த நாளையொட்டி, அவருக்கு கூகுள் நிறுவனம் இன்று (டிசம்பர் 11, 2017) டூடுல் வெளியிட்டு கவுரவம் சேர்த்துள்ளது. ஜெர்மனி நாட்டில் உள்ள பிரெஸ்லூ நகரில், 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பிறந்தவர் மேக்ஸ் பார்ன். இப்போது, இந்த பிரெஸ்லூ நகரம் போலந்து நாட்டில் உள்ளது. பிரெஸ்லூவில் உள்ள கோட்டிங்கென் பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி ஆய்வை நிறைவு செய்தார். இயற்பியல், கணிதம் ஆகிய துறைகளில் ஆர்வமிக்க மேக்ஸ் பார்ன் இல்லாவிட்டால், இன்றைக்கு மருத்துவத்துறையில் நமக்கெல்லாம் எம்ஆர்ஐ ஸ்கேன், லேசர் சாதனங்கள் கிடைத்திருக்காது. அல்லது, இன்னும் வெகுகாலம் ஆகியிருக்கலாம். கருத்தியல் இயற்பியல், குவாண்டம் இயக்கவியலில் மட்டுமின்றி, கணித சமன்பாடுகளை உருவாக்குவதிலும் கெட்டிக்காரர். தனிநபர் கணினி பயன்பாட்டிற்கும் இவருடைய பல ...
உலகை ஈர்த்த தமிழருக்கு கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!

உலகை ஈர்த்த தமிழருக்கு கூகுள் ‘டூடுல்’ கவுரவம்!

இந்தியா, உலகம், சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
வானியல் இயற்பியலில் முதன்முதலாக நோபல் பரிசு பெற்ற தமிழரான சுப்ரமணியன் சந்திரசேகரின் 107வது பிறந்த நாளை கவுரவிக்கும் விதமாக, கூகுள் நிறுவனம் இன்று (அக். 19, 2017) 'டூடுல்' (Doodle) வெளியிட்டு அசத்தியுள்ளது. பாகிஸ்தான் இந்தியாவுடன் இணைந்திருந்த காலக்கட்டத்தில் (பிரிட்டன் இந்தியா) லாகூரில் 19.10.1910ம் தேதி பிறந்தவர் சுப்ரமணியன் சந்திரசேகர். லாகூரில் ஐந்து ஆண்டுகள், பின்னர் லக்னோ நகரில் 2 ஆண்டுகள் வசித்த அவருடைய பெற்றோர், சென்னைக்கு புலம்பெயர்ந்தனர். சந்திரசேகரின் பெற்றோர், சுப்ரமணியன் அய்யர் - சீதாலட்சுமி. 6 சகோதரிகள், 3 சகோதரர்களுடன் பிறந்தவர்தான் சந்திரசேகர். இப்போது இரண்டு வயதிலேயே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். அப்போது ஓரளவு வசதி படைத்தவர்களுக்கு ஆரம்பக்கல்வி, அவர்களின் வீட்டிலேயே கற்றுக்கொடுக்கப்படும். அப்படித்தான் சந்திரசேகருக்கும். ஆரம்பக்கல்வி வீட்டிலேயே பயிற்று...