Thursday, April 25மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: Ghajini

அம்மா ஆனார் அசின்! ; பெண் குழந்தை பிறந்தது

அம்மா ஆனார் அசின்! ; பெண் குழந்தை பிறந்தது

இந்தியா, சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
தமிழில், 'உள்ளம் கேட்குதே' படத்தின் மூலம் அறிமுகமான அசின், சூர்யாவுடன் நடித்த 'கஜினி' படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். நடிகர் விஜய்யுடன் 'போக்கிரி', 'சிவகாசி', கமல்ஹாசனுடன் 'தசாவதாரம்', விக்ரமுடன் 'மஜா', அஜீத்துடன் 'ஆழ்வார்' என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து, நம்பர்-1 இடத்தில் இருந்தார். கோலிவுட்டில் பெரும் வெற்றி பெற்ற 'கஜினி' படம், ஹிந்தியில் ஆமீர்கான் நடிப்பில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. கஜினியில் அசின் நடிப்பு பாராட்டும்படி இருந்ததால், ஹிந்தி மறுபதிப்பிலும் ஹீரோயின் வேடத்தில் அவரே நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஆமீர்கான், இயக்குநர் முருகதாஸ் உள்பட அனைவருமே எதிர்பார்த்ததால், ஹிந்தியிலும் அவரே நடித்தார். பாலிவுட்டிலும் கஜினி படம் அமோகமாக வெற்றி பெற்றதை அடுத்து, ஹிந்தி ரசிகர்களுக்கு ஏற்ப தன் உடல் எடையை மேலும் குறைத்தார். தொடர்ந்து சல்மான்கான் போன்ற
பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே – திரை இசையில் வள்ளுவம் #தொடர்

பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே – திரை இசையில் வள்ளுவம் #தொடர்

இலக்கியம், சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள்
திரை இசைப்பாடல்களில் பொதிந்திருக்கும் குறள் இன்பத்தை வெளிக்கொணர்வதே இத்தொடரின் நோக்கம். இந்த பகுதியில் பெரும்பாலும் காதல் பாடல்களே இடம் பெற்று வந்தன. இந்த முறை அதில் சிறு மாற்றம். இரண்டு முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நேரம் இது. மாணவர்களுக்கு இந்தத் தொடரின் மூலம் சில செய்திகளைச் சொல்லலாம். இரண்டாவது காரணம், ஜூன் 24ம் தேதி இளங்கம்பன் கண்ணதாசன் பிறந்த தினம். நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன். ''பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை'' என்ற பொய்யாமொழியன், செல்வத்தை ஒருபோதும் உடைமையாகச் சொன்னதில்லை. அது வரும்; போகும். நிலையற்றது. அவன், ஊக்கம் உடைமையைத்தான் உண்மையான உடைமை என்கிறான். அதனால்தானோ என்னவோ அய்யன் வள்ளுவன், ஊக்கமுடைமையை பொருட்பாலில் வைத்துப் பாடியிருக்கிறான். ஒருவனுடைய ஊக்கம் எப்படி இருக