சேலம்: ஓசியில் கறி கேட்டு முதியவரிடம் வீரம் காட்டிய காக்கிகள்! இடமாற்றத்தால் மன்னிப்பு கேட்டு கெஞ்சல்!!
சேலத்தில் ஓசியில் இறைச்சி தர மறுத்த முதியவரை ஏக வசனத்தில் பேசியதுடன், அடித்து உதைத்த இரண்டு எஸ்ஐக்கள் அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டனர்.
சேலத்தை அடுத்த கம்மாளப்பட்டியைச் சேர்ந்தவர் மூக்குத்தி கவுண்டர் (75). இவர், சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையம் அருகே கறிக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று (ஜனவரி 13) காலை
காவல்துறை ஜீப்பில் வந்த
அன்னதானப்பட்டி
உதவி காவல் ஆய்வாளர் பாலசுப்ரமணி,
வாகனத்தில் இருந்தபடியே,
'2 கிலோ ஆட்டுக்கறி சீக்கிரம் வெட்டுடா....'
என அதிகார தொனியில் கேட்டார். ஓரளவு கூட்டம்
இருந்த நிலையில், பலர் முன்னிலையில்
உதவி ஆய்வாளர் கண்ணியக்குறைவாக
கூறியதைக் கேட்டு அதிர்ச்சி
அடைந்த மூக்குத்தி கவுண்டர்,
'ஏங்க உங்க வயசு என்ன... என்னோட வயசு என்ன...
கொஞ்சமாவது வயசுக்கு
மரியாதை கொடுங்க,'
என்று கூறினார்.
இதனால் ஆத்திரம...