மேகி நூடுல்ஸூக்கு மீண்டும் இடியாப்ப சிக்கல்!
நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுஸ்ல்ஸே இடியாப்பம் போலத்தான் சுருண்டு கிடக்கும். அதற்குத்தான் இப்போது மீண்டும் இடியாப்ப சிக்கல் ஆரம்பமாகி இருக்கிறது.
நம்ம ஊர்களில் குறிப்பாக கணவன், மனைவி இருவரும் வேலைக்குப் போகும் வீடுகளில் இரண்டே நிமிடங்களில் சமையல் வேலை முடிகிறது எனில் நிச்சயம் அவர்கள் வீட்டில் அன்றைய தினம், நூடுல்ஸ்தான் முக்கிய உணவாக இருக்கும் என்று புரிந்து கொள்ளலாம்.
அந்தளவுக்கு நெஸ்ட்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ், சந்தையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தைகள் விரும்பி உண்ணும் உணவாகவும் இருந்து வருகிறது.
கடந்த 2015ம் ஆண்டில் ஒருமுறை தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மேகி நூடுல்ஸில் அதிர்ச்சிகரமான பல ரசாயனங்கள் சுவைக்காக சேர்க்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுபோன்ற துரித உணவுகளில் 0.01 முதல் 2.5 பிபிஎம் வரை மட்டுமே காரீயம் சேர்க்கப்பட வேண்டும். இது ஒருவகையான செ...