”உறவுகளை இணைக்கும் பாலமாய் இருப்பதே மகிழ்ச்சி” – ஈசன் கார்த்திக் பெருமிதம்
''கல்யாணமோ காதுகுத்தோ எந்த ஒரு வீட்டு விசேஷம் என்றாலும் மாமன்,மச்சான், அண்ணன்,தம்பி என்று ஒட்டுமொத்த சொந்தபந்தங்களும் களத்தில் இறங்கி, வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு பம்பரமாய் சுழன்றது எல்லாம் அந்தக்காலம். தனிக்குடும்பங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில், சிதறிக்கிடக்கும் உறவுகளை இணைத்து, வீட்டு விசேஷங்களை சிறப்பாக நடத்திக் கொடுப்பதே என்னைப்போன்ற ஈவன்ட் மேனேஜ்மென்ட் ஆட்கள்தான்,'' என தன் தொழில் மீதான பெருமிதத்தை மிடுக்கோடு கூறுகிறார் ஈசன் கார்த்திக்.
சேலம் பெரமனூர் மெயின் ரோடு, கேப்பிடல் டவர்ஸில் 'யுனிக் ஈவன்ட் மேனேஜ்மென்ட்' நிறுவனத்தை நடத்தி வருகிறார், ஈசன் கார்த்திக். ஈவண்ட் மேனேஜ்மென்ட் துறையில் இவர் ஒரு நம்பிக்கைக்குரிய வரவு.
ஈவன்ட் மேனேஜ்மென்ட் துறை தேவை குறித்து விரிவாக பேசலானார்...
சுயமாக தொழில் செய்ய வேண்டும் என்பது என் ஜீனிலேயே கலந்து இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்...