குஜராத்: முதல்கட்ட தேர்தலில் 68% வாக்குப்பதிவு
குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு இன்று (டிசம்பர் 9, 2017) நடந்த முதல்கட்ட தேர்தலில் 68% பேர் வாக்களித்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக, 89 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்தது. அம்மாநில முதலமைச்சர் விஜய்ருபானி உள்பட 977 வேட்பாளர்கள் இன்றைய வாக்குப்பதிவை சந்தித்தனர். இவர்களில் 57 பேர் பெண் வேட்பாளர்கள்.
சூரத் உள்ளிட்ட சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறுகள் போன்ற பிரச்னைகள் எழுந்தாலும் அமைதியாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. காலை 8 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிந்தது.
பகரூச் சட்டப்பேரவை தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மண மேடையில் முகூர்த்தம் முடிந்து திருமண கோலத்தில் நேராக வாக்குச்சாவடிக்கு வந்து தம்பதியர் ஓட்டுப்போட்டனர். உல்லேடா பகுதியில் 126 ...