Saturday, December 7மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: first murder

தேமுதிக பிரமுகரை போட்டுத்தள்ளிய நயன்தாரா ரசிகர்கள்! முதல் கொலைக்கு 500 ரூபாய் கூலி; சிறார் குற்றவாளியின் திடுக் பின்னணி!!

தேமுதிக பிரமுகரை போட்டுத்தள்ளிய நயன்தாரா ரசிகர்கள்! முதல் கொலைக்கு 500 ரூபாய் கூலி; சிறார் குற்றவாளியின் திடுக் பின்னணி!!

குற்றம், சேலம், முக்கிய செய்திகள், விழுப்புரம்
  சேலம் அருகே, நடந்து முடிந்த தேமுதிக பிரமுகர் படுகொலையின் பின்னணியில் , சமூகத்தை உறைய வைக்கும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.   சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள புத்தூர் வடக்குக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (42). விவசாயி. சொந்தமாக டாடா ஏஸ் சரக்கு வாகனமும் ஓட்டி வந்தார். தேமுதிக கட்சியில் சில ஆண்டுகள் கிளை செயலாளராகவும் இருந்தார். இவருடைய மனைவி ஆலயமணி (32). இவர்களுக்கு 17 மற்றும் 15 வயதுகளில் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 17, 2018ம் தேதியன்று இரவு 10 மணியளவில் தன் மனைவி ஆலயமணி, மகன்கள் இருவரையும் திருநள்ளாறு கோயிலுக்குச் செல்வதற்காக வாடகை காரில் ஏற்றி, வழியனுப்பி வைத்தார் கலியமூர்த்தி. அடுத்த சில மணி நேரங்களில் தனக்கு நேரப்போகும் விபரீதம் குறித்து அப்போது அவர் சற்றும் அறிந்திருக்கவில்லை.   'எப்போதும்போல வாசலில் படுத்துத்தூங்காமல...