Friday, March 29மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: fall

பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவு

பட்ஜெட் தாக்கம்: பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி; சென்செக்ஸ் 580 புள்ளிகள் சரிவு

இந்தியா, முக்கிய செய்திகள், வர்த்தகம்
மத்திய பட்ஜெட்டில் பங்குச்சந்தைக்கு சாதகமான அம்சங்கள் இல்லாததால், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (பிப்ரவரி 2, 2018) கடும் வீழ்ச்சி அடைந்தது. முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே பங்குச்சந்தை தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்டது. தேசிய பங்குச்சந்தை 11000 புள்ளிகளைக் கடந்தது. இந்நிலையில், மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் முதலீட்டாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆண்டுக்கு ரூ.250 கோடிக்கு மேல் வருமானம் பெறும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 25 சதவீதம் குறைக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் கவனம் கார்ப்பரேட் நிறுவன வருமானத்தின் மீது திரும்பி உள்ளது. இதன் தாக்கம் நேற்று பகலிலேயே பங்குச்சந்தையில் எதிரொலித்தது. நேற்று ஏற்றத்துடன் வர்த்தகம் தொடங்கிய நிலையில், பெரும் சரிவுடன் நேற்றைய வர்த்தகம் மு