முக அடையாளம் தொழில்நுட்பத்துடன் வெளியாகியுள்ள ஆப்பிள் ஐஃபோன் எக்ஸ்!
ஸ்மார்ட் ஃபோன் வரிசையில் இதுவரை இல்லாத வகையில் 'எட்ஜ் டூ எட்ஜ்' திரைவசதி மற்றும் முகப்பு (HOME) பட்டனே இல்லாத உயர்தொழில் நுட்ப அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட் ஃபோனை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. புதிய பிராண்டின் பெயர் ஐபோன் எக்ஸ்.
என்னென்ன வசதிகள்?:
செல்போன் உரிமையாளரை வழக்கமாக அவரின் விரல் ரேகை பதிவு மூலம் சரிபார்க்க முடியும். ஆனால் ஐபோன் எக்ஸ் (iPHONE X) அப்படி அல்ல. விரல் ரேகைக்கு பதிலாக, முக அடையாளத்தை பதிவு செய்யும் வகையில் இதன் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கு, Face ID (ஃபேஸ் ஐடி) என்று பெயரிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். வெளிச்சமே இல்லாத இருட்டுப் பகுதிக்குள் எப்படி இந்த தொழில்நுட்பம் வேலை செய்யும் என்று கவலைப்பட வேண்டாம். கும்மிருட்டுப் பகுதியிலும், 30,000 இன்ஃப்ராரெட் புள்ளிகளை உருவாக்கி, அதன் மூலம் பயனரை சரிபார்க்கும் திறனும் இந்த செல்போனில் உள்ளது. இது பழை...