
‘ஆங்கிரி பேர்ட்’ பெண் கவுன்சிலர்; நிலைகுலைந்த அதிமுக தலைவர்; களேபரமான மாநகராட்சி!
'நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு?' என சினிமாக்களில் டைட்டில் கார்டுக்கு முன்பாக வரும் முகேஷின் கதை போலாகி விட்டது, சேலம் மாநகராட்சி. அண்மைக் காலமாக அரங்கேறி வரும் கவுன்சிலர்கள் மோதல், மாமன்ற அரங்கை களேபரமாக்கி வருவது பல தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாநகராட்சியில்,கடந்த மே 29ம் தேதி மாமன்றஇயல்பு கூட்டம் நடந்தது.அன்றைய தினம் காலையில்அரசு நிகழ்ச்சி இருந்ததால்தாமதமாகவே கூட்டம் தொடங்கியது.அடுத்த ஒரு மணி நேரத்தில்அதுவரை நிகழாத சம்பவம்மாமன்ற அரங்கத்தில் அரங்கேறியது.
அதிமுக கவுன்சிலரும்,எதிர்க்கட்சித் தலைவருமான யாதவமூர்த்தி,'சாலை சீரமைப்பு பணிகளுக்காக30 கோடி ரூபாயில் டெண்டர்கோரப்பட்டு இருந்தது. அமைச்சரின்ஆதரவாளரான காமராஜூக்குடெண்டர் ஒதுக்குவதற்கு ஏதுவாகடெண்டரை ரத்து செய்தது ஏன்?,'என்று கேள்வி எழுப்பினார்.
அவர் இப்படி பேசி முடிப்பதற்குள்ளாகவேஆளுங்கட்சி கவுன்சிலர்கள் பொங...