Friday, April 19மெய்ப்பொருள் காண்பது அறிவு
E-Magazine

Tag: diwali

‘மெர்சல்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்; தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?

‘மெர்சல்’ படத்திற்கு மீண்டும் சிக்கல்; தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா?

இந்தியா, உலகம், சினிமா, முக்கிய செய்திகள்
'மெர்சல்' படத்திற்கு விலங்குகள் நலவாரியத்திடம் இருந்து ஆட்சேபனையில்லா சான்றிதழ் இன்னும் பெறப்படாததால், திட்டமிட்டபடி தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதில் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜய் - இயக்குநர் அட்லி கூட்டணியில் சுமார் ரூ.135 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது 'மெர்சல்'. ஸ்ரீதேனாண்டால் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் முரளி ராமசாமி படத்தை தயாரித்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், நித்யா மேனன், சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் விஜய் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. மேஜிக் கலைஞராகவும் முதன்முதலாக நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏற்கனவே பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படத்தை வரும் 18ம் தேதி வெளியிடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்
மெர்சல் படத்தின் டைட்டில் மாறுகிறதா?

மெர்சல் படத்தின் டைட்டில் மாறுகிறதா?

சினிமா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
'சண்டையில கிழியாத சட்டை எங்கிட்டு இருக்கு?' என்ற 'கைப்புள்ள' வடிவேலு காமெடி போல, 'சர்ச்சையில் சிக்காமல் விஜய் படம் எப்போது ரிலீஸ் ஆகியிருக்கு?' என்று சொல்லும் காலம் வந்தாலும் ஆச்சர்யமில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் நடித்த படங்கள் ரிலீசுக்கு முன்னரோ அல்லது வெளியான பின்னரோ ஏதோ ஒரு வகையில் சர்ச்சையில் சிக்கி வருகிறது. 'தலைவா' படம் ரிலீசுக்கு முன்பே பிரச்னைகளை சந்தித்தது. அந்தப் படத்தின் தலைப்புக்குக் கீழ், 'பார்ன் டு லீட்' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருக்கும். அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவினர், அந்த வார்த்தைகளுக்கு அதிருப்தி தெரிவித்ததாக அப்போது தகவல்கள் வெளியாகின. கத்தி, துப்பாக்கி போன்ற படங்களும் நீதிமன்ற வழக்குகளைச் சந்தித்த பின்னரே திரைக்கு வந்தன. இந்நிலையில், சுமார் ரூ.135 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ள மெர்சல் படமும் தற்போது நீதிமன்ற வழக்கில் சிக்கி இருக்கிறது. மெர
இதுதான் ‘மெர்சல்’ படத்தின் கதையா?; அட்லி அதிர்ச்சி

இதுதான் ‘மெர்சல்’ படத்தின் கதையா?; அட்லி அதிர்ச்சி

சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
இயக்குநர்கள் சங்கர், முருகதாஸ், மணிரத்னம் போனற பிரபல இயக்குநர்கள் தங்கள் படத்தின் கதை திரைக்கு வரும் வரை எள்ளளவு கசிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். அதேபோல், படமாக்கும் காட்சிகள்கூட வெளியாகக்கூடாது என்பதற்காக படப்பிடிப்பு தளங்களில் நடிகர்கள் உள்பட ஊழியர்கள் மொபைல் போன் பயன்படுத்தவும் தடை விதிப்பார்கள். இப்போது ஏறக்குறைய எல்லா இயக்குநர்களுமே இதேபோன்ற கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், படு ரகசியமாக வைக்கப்பட்டிருந்த விஜயின் மெர்சல் படத்தின் கதை கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜயின் 61வது படமாக பிரம்மாண்ட பொருட்செயலரில் தயாராகி இருக்கிறது மெர்சல். முதல்முறையாக இந்தப் படத்தில் விஜய் மூன்று பாத்திரங்களில் நடித்துள்ளார். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். வடிவேலுவும் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமை