Wednesday, October 15மெய்ப்பொருள் காண்பது அறிவு
Shadow

Tag: democratic festival

போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #1

போலி ஜனநாயகத்திற்கா உங்கள் வாக்கு? #1

அரசியல், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதைக் காட்டிலும் அதில் மெச்சத்தக்கது வேறேதும் இல்லை என்பது என்னளவிலான புரிதல். ஏப்ரல் 18, 2019ல் நடக்க இருக்கும் மிகப்பெரும் ஜனநாயகத் திருவிழாவில் பங்கேற்க, தமிழக வாக்காளர்கள் இந்நேரம் மனதளவில் தயார் படுத்திக் கொண்டிருக்கக்கூடும். வாக்குச்சாவடிக்குள் நீங்கள் செல்வதற்குள்ளாவது நான் உங்களுடன் பேசி விட வேண்டும் என்ற உந்துதலாலேயே இப்போது பேச விழைகிறேன். இந்தியத் தேர்தல் அமைப்பு முறை, இந்த தேசத்தின் குடிமக்களை வெறும் வாக்காளன் என்ற அளவில் மட்டுமே சுருங்கிப் போகச் செய்துவிட்டதுதான், இந்திய ஒன்றியத்தில் நாம் கண்ட மக்களாட்சி தத்துவம். சொல்லப்போனால், இப்போதுள்ள தேர்தல் நடைமுறைகள், அரசியல் களத்தில் இருந்து சாமானிய மக்களை முற்றாக ஒதுக்கித் தள்ளிவிட்டது எனலாம். உடனே நீங்கள், காளியம்மாக்களும், பொன்னுத்தாய்களும்கூட இந்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு பெற்...