![பாரதியார் பல்கலை துணைவேந்தர் கைதானது எப்படி?; ”வசூலிப்பதே முழுநேர தொழில்”; திடுக்கிடும் தகவல்கள்](https://puthiyaagarathi.com/wp-content/uploads/2018/02/ganapathi-2-1-1-1-1-1-1-1-1-1.png)
பாரதியார் பல்கலை துணைவேந்தர் கைதானது எப்படி?; ”வசூலிப்பதே முழுநேர தொழில்”; திடுக்கிடும் தகவல்கள்
கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டதன் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் பொறுப்புக்கு வந்த நாள் முதல், நடந்த அனைத்து பணி நியமனங்களிலுமே யுஜிசி விதிமீறல்களும், பண பேரமும் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோயம்பத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதியை, லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி தட்சணாமூர்த்தி தலைமையிலான போலீசார், இன்று (பிப்ரவரி 3, 2018) காலையில் கையும், களவுமாக சுற்றிவளைத்துப் பிடித்து கைது செய்தனர்.
இந்தப் பல்கலையின் துணைவேந்தராக கணபதி, கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் நியமிக்கப்பட்டார். மன்னார்குடி கும்பலின் ஆசியுடன் அவர் இந்தப் பதவியில் அமர்த்தப்பட்டார். அப்போது தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யா, ஜெயலலிதாவுக்கு ரொம்பவே இணக்கமாக இருந்தார்.
மன்னார்குடி கும்பல் ஆசி:
அதனால்தான், சசிகலா கும்பல் கைக்காட்ட...